டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் ''நல்ல'' முகமின்றி தவிக்கும் பாஜக.. என்ன செய்வார் அமித் ஷா?.. களமிறங்கும் மத்திய அமைச்சர்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் மத்திய அமைச்சர் ஒருவரை பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும். 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

Recommended Video

    ஒன்றாக சேர்ந்து தேசிய கீதம்.. டெல்லி ஜம்மா மசூதியில் நெகிழவைக்கும் சிஏஏ போராட்டம் - வீடியோ

    கேவலமான அரசியல் என மம்த ஆவேசம்.. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை புறக்கணித்தார்.. பரபரப்பு பின்னணிகேவலமான அரசியல் என மம்த ஆவேசம்.. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை புறக்கணித்தார்.. பரபரப்பு பின்னணி

    டெல்லி வெற்றி

    டெல்லி வெற்றி

    டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட அங்கு பெரிய அளவில் சிறந்த முகம் எதுவும் இல்லை. கிட்டத்தட்ட 20 வருடங்களாக டெல்லியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. ஆனால் பாஜகவிற்கு சரியான தலைவர்கள் டெல்லியில் இல்லை. அதேபோல் அங்கு காங்கிரஸ் பாஜகவை வளரவிடாமல் தடுத்தும் வந்தது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் டெல்லியின் முக்கியத்துவத்தை பாஜக இப்போதுதான் உணர தொடங்கி உள்ளது. டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் தொடங்கி அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலின் அதிரடி திட்டங்கள் வரை பாஜகவிற்கு பெரிய தொல்லையாக மாறியுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் டெல்லியில் ஆட்சியை பிடிக்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறது.

    டெல்லி யூனியன் பிரதேசம்

    டெல்லி யூனியன் பிரதேசம்

    என்னதான் டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தாலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மற்ற மாநிலங்களில் யாரும் நினைக்காத விஷயங்களை கூட , குறைந்த பட்ச பவரை வைத்து நிறைவேற்றி வருகிறார். இதனால் கெஜ்ரிவால் கொஞ்சம் தேசிய முகமாக உருவெடுத்துக்கொண்டு இருக்கிறார்.

    எப்படி தலைகள் '

    எப்படி தலைகள் '

    எதிர் தரப்பில் பெரிய அளவில் தலைவர்கள் இல்லாத நிலையில் கெஜ்ரிவால் இப்படி வேகமாக வளர்ந்து வருவது பாஜகவிற்கு அச்சம் அளிக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்றுதான் தற்போது பாஜக களமிறங்கி உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் பாஜக எப்படியாவது பெரிய அளவில் வெற்றிபெற்று, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

    திட்டம் வகுப்பு

    திட்டம் வகுப்பு

    இதற்காக பாஜக இப்போதே திட்டங்களை வகுக்க தொடங்கி இருக்கிறது. டெல்லியில் பாஜகவிற்கு பெரிய அளவில் முகங்கள் கிடையாது. அங்கு மனோஜ் திவாரி, விஜய் கோயல், ஹர்ஷ் வர்தன் ஆகிய தலைவர்கள் இருக்கிறார்கள். இதில் ஹர்ஷ் வரதன் தவிர பெரிய அளவில் வேறு யாருமே மக்கள் மத்தியில் பிரபலம் இல்லை. ஆனால் அவரும் கூட தோல்வி அடைந்த நபர் என்ற பெயர் கொண்டவர்.

    யாரை முன்னிறுத்தும்

    யாரை முன்னிறுத்தும்

    இதனால் யாரை முன்னிறுத்தி பாஜக வெல்லும் என்று கேள்வி எழுந்துள்ளது. உத்தர பிரதேசம் போல டெல்லி மக்கள் அப்படியே மோடியை பார்த்து வாக்களிக்கும் நபர்கள் கிடையாது. அதனால் அவர்களுக்கு என்று சிறந்த அரசியல் தலைவர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக திட்டமிடும் என்கிறார்கள்.

    சிலர் இருக்கிறார்கள்

    சிலர் இருக்கிறார்கள்

    இதற்காக பாஜக சில அமைச்சர்களை மனதில் வைத்துள்ளது. ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேக்கர், ரமேஷ் போக்ரியால் ஆகியோரை பாஜக மனதில் வைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்மிரிதி இராணியையும் பாஜக மனதில் வைத்து இருப்பதாக கூறுகிறார்கள். ஸ்மிரிதி இராணிக்கு நிறைய வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் வருகிறது.

    வருவார் கண்டிப்பாக

    வருவார் கண்டிப்பாக

    இவர்களில் யாரை வேண்டுமானாலும் பாஜக முதல்வராக முன்னிறுத்தும்.காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்த ஷீலா தீட்சித் இப்போது இல்லை. இதனால் அங்கு பெண் தலைவர் ஒருவரை முன்னிறுத்த பாஜக முயன்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் பாஜக யோகி ஆதித்யாநாத்தை களமிறங்கியது போல இங்கும் ஒருவரை களமிறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Delhi Assembly Election: BJP will use a minister face to win the capital after 2 decades.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X