டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு.. 9 மணி நேர விசாரணை.. மணிஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ!

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி ஆம்ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு பிறகு மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். துணை முதல்வராக மணிஷ் சிசோடியாக உள்ளார். கடந்த 2021 நவம்பரில் அங்கு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தன.ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ஆம்ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கயை திரும்ப பெற்றது.

ஆம்ஆத்மி மறுப்பு

ஆம்ஆத்மி மறுப்பு

இருப்பினும் புகார்கள் தொடர்பாக தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஊழலில் ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக மணிஷ் சிசோடியா முக்கிய குற்றவாளியாக இருக்கிறார் எனவும் பாஜக தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை ஆம்ஆத்மி கட்சி மறுத்து வருகிறது. அரசியல் உள்நோக்கத்தில் பாஜக மத்திய விசாரணை அமைப்பு மூலம் ஆம்ஆத்மி கட்சியை முடக்க நினைக்கிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்தனர்.

மணிஷ் சிசோடியா வீட்டில் சோதனை

மணிஷ் சிசோடியா வீட்டில் சோதனை

இருப்பினும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை செய்தனர். மேலும் விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்‛‛சவுத் குரூப்'' என்ற தொழிலதிபர்கள் குழுவுக்கு தொடர்பு இருப்பதும், ரூ.100 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. விசாரணையில் தொழிலதிபர் குழுவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின்(கேசிஆர்) மகளும், எம்எல்சியுமான கவிதா மற்றும் அக்கட்சியின் எம்பி இருப்பது தெரியவந்தது. மேலும் கவிதா தான் அந்த தொழிலதிபர்கள் குழுவை கட்டுப்படுத்துவதாக தகவல்கள் பரவின. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கவிதாவிடம் சமீபத்தில் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவரது முன்னாள் ஆடிட்டரான புச்சி பாபுவை கைது செய்தனர். இந்த புச்சி பாபு தான் ‛சவுத்குரூப்' தொழிலதிபர்களுக்கும், ஆம்ஆத்மி சார்ந்த நபர்களுக்கும் இடையே பாலமாக இருந்ததாக கூறப்பட்டது.

சன்ரூப் காரில் ஊர்வலம் வந்து ஆஜர்

சன்ரூப் காரில் ஊர்வலம் வந்து ஆஜர்

இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிப்ரவரி 19 ல் விசாரணைக்கு ஆஜராக கூறியிருந்தது. ஆனால் பட்ஜெட் தயாரிப்பு பணியால் அவர் விலக்கு கோரினார். இதனை சிபிஐ ஏற்றுக்கொண்ட நியைலில் இன்று மணிஷ் சிசோடியா டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு ஆஜராகி உள்ளார். முன்னதாக அவர் தனது வீட்டில் இருந்து சிபிஐ அலுவலகம் வரை சன்ரூப் காரில் நின்றபடி ஊர்வலமாக வந்தார்.

கைது செய்தது சிபிஐ

கைது செய்தது சிபிஐ

இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. முன்னதாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வந்த மணிஷ் சிசோடியா, தனதுஆதரவாளர்களுடன் வருகை தந்தார். ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், மேலும் பிரச்சனைகள் வராமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு, மத்திய படை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக மணிஷ் சிசோடியாக மத்திய பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அதாவது சிபிஐ அலுவலகம் ஆஜராவதற்கு முன்பு மணிஷ் சிசோடியா ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+