வரலாறு காணாத மழையால் தத்தளிக்கும் டெல்லி : பெருகிய வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தலைநகர் டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் டெல்லியில் 11.21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ள நீரினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
டெல்லி: காணும் இடமெங்கும் தேங்கிய வெள்ளநீரினால் தலைநகர் டெல்லி தத்தளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ள நீரினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கி பெய்து வருகிறது. சில நாட்கள் தீவிரமாக கொட்டித்தீர்க்கும் மழை, சில நாட்கள் ஓய்வெடுக்கும். டெல்லியில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஒரேடியாக கொட்டித்தீர்த்தது கனமழை. ஒரே நாளில் 11.21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்ச மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக முனிர்கா, சப்தர்ஜங், மயூர் விஹார் , நேரு பிளேஸ், கரோல் பாக் என நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

டெல்லியில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. பகல் நேரத்தில் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என தெரிவித்துள்ளது. ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்ரா வெள்ளம், அசாம் மாநிலத்தின் 21 மாவட்டங்களை வெள்ளக்காடாக்கியுள்ளது. சுமார் 4 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் பத்துக்கும் அதிகவிலங்குகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தநிலையில், சரணாலயத்தின் 70 சதவிகித நிலம், மழையால் மூழ்கியுள்ளது.
அசாம் மட்டுமல்லாமல் அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் மிக அதிகமான கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நேபாள நாட்டில் பெய்துவரும் கனமழையால், பீகாரிலும் கடும் விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பீகாரின் கண்டக், கோஷி, பாகமதி, கம்லா ஆகிய நதிகளில் அபாய அளவை கடந்து வெள்ளம் கரைபுரள்கிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக டேராடூன், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிக அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications