பெண் அழுகுரல், நாய் ஊளை சத்தம்! டெல்லி இளம்பெண் கொலையால்.. அச்சத்தில் இருக்கும் குடியிருப்புவாசிகள்
டெல்லி: டெல்லியில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த தனது காதலியை 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அந்தக் குடியிருப்பில் இருப்பவர்கள் பேய் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இரவு நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்றும், குறிப்பாக, அந்தப் பெண் கொல்லப்பட்ட வீடு இருக்கும் தளத்தில் இருப்பவர்களுக்கு பயத்தில் ஜன்னி காய்ச்சலே வந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல், பெண் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் மே மாதத்துக்கு பிறகு நாய்கள் ஊளையிடும் சத்தமும், பெண் அழுகுரலும் கேட்டதாக அந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் அச்சத்துடன் நினைவுப்படுத்தி சொல்கின்றனர்.

நாட்டையே உலுக்கிய கொலை..
டெல்லி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது ஷாரதா என்ற இளம்பெண்ணின் படுகொலை. மும்பையைச் சேர்ந்த ஐடி ஊழியரான சாரதா (26), அப்தாப் அமீன் என்ற இளைஞருடன் டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். முதலில் அவர்கள் மும்பையில் தான் தங்கியிருந்தனர். ஆனால், தங்கள் மகள் வேறொரு ஆணுடன் இப்படி ஒரே வீட்டில் தங்கியிருப்பது சாரதாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் அடிக்கடி அங்கு சென்று அப்தாப் உடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக, சாரதாவும், அப்தாப்பும் டெல்லியில் குடியேறினர்.

அலறவிட்ட அல்டாஃப்..
ஆனால் அதன் பிறகுதான் வினையே ஆரம்பித்துள்ளது. டெல்லிக்கு குடிப்பெயர்ந்த சில நாட்களிலேயே தன்னை திருமணம் செய்ய அப்தாப்பிடம் வற்புறுத்த தொடங்கி இருக்கிறார் சாரதா. ஆனால் சாரதாவை திருமணம் செய்துகொள்ள அப்தாபுக்கு விருப்பமில்லை. இதனிடையே, நாளுக்கு நாள் சாரதாவின் தொந்தரவு அதிகமானதால் ஆத்திரமடைந்த அப்தாப், கடந்த மே மாதம் அவரை கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்தார். பின்னர், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஃபிரிட்ஜில் வைத்து, பின்னர் பல நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக சாரதாவின் உடல் பாகங்களை பல இடங்களில் புதைத்து வந்துள்ளார் அப்தாப்.

ஹாட் டாப்பிக்..
இதனிடையே, மகள் குறித்த எந்த தகவலும் இல்லாததால் சாரதாவின் தந்தை போலீஸுக்கு புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸ் நடத்திய விசாரணையில்தான், சாரதாவை அப்தாப் கொலை செய்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், சாரதாவை கொலை செய்து அவரது உடலை அப்புறப்படுத்த அப்தாப் எடுத்த முயற்சிகளும் தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது இந்த செய்திதான் இந்தியா முழுவதும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

அழுகுரல் - நாய் ஊளை..
இந்தக் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதே குடியிருப்பில் வசிப்பவர்களோ பயத்தில் நடுங்கி வருகின்றனர். அந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் இதுகுறித்து கூறுகையில், "இத்தனை மாதங்களாக அப்படியொரு பெண் அந்த வீட்டில் வசித்து வந்ததே எங்களுக்கு தெரியாது. அந்த பையனை மட்டும்தான் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற கொடூரக் கொலை நடந்திருப்பதால் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே பயமாக உள்ளது. யாரோ அழுவது போன்ற குரல் கேட்கிறது. இதனால் அனைவரும் ஒருவித பயத்தில்தான் இருக்கிறோம். குறிப்பாக, கொலை நடந்த வீடு இருக்கும் தளத்தில் இருப்பவர்கள் பீதியில் உறைந்துள்ளனர். அந்தப் பெண் மே மாதம் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். உண்மையில், இப்போதுதான் எங்களுக்கு பல விஷயங்கள் நியாபகத்துக்கு வருகின்றன. அதாவது, ஜூன், ஜூலை மாதங்களில் குடியிருப்புகளை சுற்றியுள்ள நாய்கள் தொடர்ந்து ஊளையிட்டு வந்தன. இப்போது அதை நினைத்தாலே எங்களுக்கு பயத்தில் கை, கால்கள் உதறல் எடுத்து விடுகின்றன" என்றனர்.












Click it and Unblock the Notifications