"Gen Z இளைஞர்களை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள்.." திடீரென மவுனம் கலைத்த தர்மேந்திர பிரதான்! சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக நடந்த மாணவர் போராட்டங்களால் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா குறித்து முதல் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார். அப்போது Gen Z தலைமுறையினரை சிலர் தவறாக வழிநடத்தியதாகக் கூறிய அவர், தானாகவே முன்வந்து ராஜினாமா செய்ததாகவும் குறிப்பிட்டார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நீட் மாணவர் போராட்டம், ராஜினாமா என பல விஷயங்கள் குறித்து பேசினார்.

Dharmendra Pradhan on NEET Protest Dharmendra Pradhan NEET Protest

தவறாக வழிநடத்தினர்

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "Gen Z நம்முடைய குழந்தைகள். அவர்களை சிலர் தவறாக வழிநடத்த முயன்றனர். அமைச்சர் பதவி எனக்கு ஒருபோதும் முக்கியமானதாக இருந்ததில்லை. என்னை யாரும் அமைச்சர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தவில்லை. நானாகவே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ராஜினாமா செய்ததாகச் சொன்னேன்.

இந்தியாவில் ஆண்டுக்கு குறைந்தது 2 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 20 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்கு எதிர்காலம் குறித்த கனவுகளும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. அவர்கள் இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றுவார்கள். அவர்கள் தான் நம் எதிர்காலம். எனவே, அந்த அமைச்சர் பதவி எனக்கு முக்கியமானதாக இருக்கவில்லை" என்றார்.

பின்னணி

நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் கடந்த ஜூலை 25ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். டெல்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய மாணவர் போராட்டங்களுக்கு நாடு முழுக்க ஆதரவு அதிகரித்தது. டெல்லி மட்டுமின்றி மும்பை, சென்னை என பல நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. இதனால் வேறு வழியில்லாமல் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயி மகன்

இதற்கிடையே ராய்ரகோல் பகுதியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திர பிரதான், ஒடிசா முன்னாள் முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கையும் விமர்சித்தார். தன்னை எதிர்த்து பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் போராட்டம் நடத்தியதை குறிப்பிட்ட அவர், "நான் ஒரு விவசாயியின் மகன். நீங்கள் எனக்கு எதிராக போராட்டம் நடத்தினாலும்.. நான் திரும்பி வருவேன். நான் ஒடிசா மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது செய்திருக்கிறேனா?" என்றும் உருக்கமாக பேசினார்.

பதிலடி

தர்மேந்திர பிரதானின் குற்றச்சாட்டுகளுக்கு பிஜேடி பதிலடி கொடுத்தது. பிஜேடி கட்சியின் ரோஹித் பூஜாரி இது குறித்து கூறுகையில், "மாணவர் போராட்டங்களை அரசு கையாண்ட விதத்தை உலகமே பார்த்தது. தர்மேந்திர பிரதானை நாங்கள் விமர்சிக்க காரணம் அதுதான். ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதற்காக தான் தர்மேந்திர பிரதான் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீட் விவகாரத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பாஜக அரசின் தவறான கொள்கைகளால் ஏற்பட்ட பிரச்சினை!" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+