Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரை காப்பாற்றாமல்.. குஜராத் வைர வியாபாரிகளுக்கு மட்டும் சலுகை தருவதா?- தயாநிதி மாறன் சீற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : திருப்பூர் ஜவுளி தொழிலைக் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தால், குஜராத் வைர வியாபாரிகளை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது எனவும், தென் மாநிலங்களிடம் வரியை பெற்று மத்திய அரசு வடமாநிலங்களுக்கு அதிக பணத்தை வழங்கி துரோகம் செய்வதாகவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

குறிப்பாக தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் துரோகம் இழைத்து உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டுகளில் நீண்ட நேரமாக பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர் தற்போது தனது உரையை மிகக் குறைவான நேரத்திலேயே வாசித்திருக்கிறார் என்றார்.

பிச்சை எடுக்கலாம்

பிச்சை எடுக்கலாம்

தொடந்து பேசிய தயாநிதி மாறன், " ஒருவேளை அவர் வேறு ஒரு பத்திரிக்கை நேர்காணலுக்கு செல்ல வேண்டி இருக்கலாம் என்ற காரணத்தால் பட்ஜெட்டை மிக வேகமாக வாசித்தாரோ என்னவோ, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள் விரோதமானது மக்கள் நலனை இந்த அரசு முற்றிலும் புறக்கணித்து உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி மொத்த செலவு 39.45 லட்சம் கோடிகள்,பற்றாக்குறை 16.61 லட்சம் கோடிகள், அப்படியென்றால் இந்தக் கடன்களை ஈடுகட்ட என்ன செய்வது ? ஒன்று இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்களை விற்று விடலாம் அல்லது பிச்சை எடுக்கலாம்.

விவசாயிகளுக்கு துரோகம்

விவசாயிகளுக்கு துரோகம்

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் ஆனால் விவசாயத்துறைக்கு பட்ஜெட்டில் எந்தவிதமான பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட எந்தவித கோரிக்கைகளுக்கும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லை. விவசாயிகளுக்கு நல்ல திட்டங்கள், இழப்பீடுகள் என எதுவும் அறிவிக்கப்படவில்லை. தலைநகரின் எல்லையில் நின்று விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி இறந்த விவசாயிகள் குறித்து தங்களிடம் தரவுகள் இல்லை என்று மத்திய அரசு பதில் அளிக்கிறது. இந்த பதிலால் நாங்கள் ஆச்சரியப்படப் போவதில்லை. ஏனென்றால் கடந்த காலங்களிலும் மத்திய அரசு இதுபோல் தான் விவசாயிகளுக்கு எதிராகவே நடந்துள்ளது.

பாஜகவின் மோசமான சிந்தனை

பாஜகவின் மோசமான சிந்தனை

ஏழை மக்களின் கைகளில் ஒரு ரூபாய் கூட மிச்சம் இருக்க கூடாது என்ற பாஜகவின் மோசமான சிந்தனை காரணமாகவே மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது போலவே மத்திய அரசு செயல்பாடு இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் திருப்பூரில் ஜவுளி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என கேட்டால் குஜராத் வைர வியாபாரிகளுக்காக வைரத்திற்கு 5 சதவீத வரி குறைப்பு செய்துள்ளீர்கள். சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ள திருப்பூர், இந்தியாவின் பல பில்லியன் டாலர் வணிகத்தை கொண்ட ஆடைத் தொழிலில் தலைநகரமாக சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. நூல் விலை உயர்வு, கொரோனா லாக் டவுன் ஆகியவை காரணமாக திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

திருப்பூர் ஜவுளித் தொழில்

திருப்பூர் ஜவுளித் தொழில்

ஜவுளித்தொழிலை மீட்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , இது குறித்து அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் மத்திய அரசு திருப்பூருக்கு செய்தது என்ன. திருப்பூர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை ஒன்றை கூட பாஜக அரசு நிறைவேற்றவில்லை. நமது அண்டை நாடான பங்களாதேஷை எடுத்துக்கொள்ளுங்கள். ஜவுளித்துறையில் திருப்பூரின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு தவறியதால், அது நம்மை விட முன்னேறி வருகிறது. பாஜக அரசு தெற்கை மதிக்கவில்லை. ரயில்வேயில் கூட தமிழ்நாடு முன்மொழிந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒரே நாடு ஒரே பதிவு திட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை தலையிடுவது கூட்டாட்சி முறை குறித்து அரசியலமைப்பை வழிகாட்டும் கொள்கைகளுக்கு துரோகம் செய்கிறது.

புறக்கணிக்கப்படும் தென் மாநிலங்கள்

புறக்கணிக்கப்படும் தென் மாநிலங்கள்

தென் மாநிலங்கள் வசூலிக்கும் பணம் அனைத்தும் "பெரியண்ணனுக்கு" கொடுக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் ஒடிசா போன்ற வளரும் மாநிலங்கள் இதனால், பெரும் பாதிப்பை அனுபவிக்கின்றன. பாஜக ஆளாத மாநிலமாக இருந்தால், வளர்ச்சி இல்லை, மேற்கு வங்கம் என்றால் எதுவும் நடக்காது, தமிழ்நாடு என்றால் எதுவும் நடக்காது. இவ்வாறு தயாநிதிமாறன் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார். மேலும் 2017ல் நீட் தேர்வு வந்தபோது போது பேசிய தற்போதைய நிதியமைச்சர், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறாததால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க ஆதரவளிப்பதாகக் கூறி, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். ஆனால் இப்போது நிர்மலா சீதாராமன் ஏன் நீட் விலக்கிற்கு ஆதரிக்கவில்லை? எனவும் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

 செல்வந்தர்கள் பணக்காரராகிறார்கள்

செல்வந்தர்கள் பணக்காரராகிறார்கள்

லாக்டவுன் கால கட்டத்தில் இந்திய கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்து மதிப்பை 35% அதிகரித்துள்ளனர், அதேசமயம் 12 கோடி மக்கள் மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் சொல்லும் வளர்ச்சியால் உண்மையில் பயனடைந்தது யார்? யாரோ ஒருவர் பலன் அடைந்தார் சார்... பாஜகவின் செல்வமும் வளர்ச்சி கண்டது.. அனைத்து அரசியல் கட்சிகளைவிடவும் பாஜகவிடம் அதிக பணம் உள்ளது. 2019-20 நிதியாண்டில் ரூ. 4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருப்பதாக பிஜேபி அறிவித்தது. 2018-19ல் நீங்கள் அறிவித்தது ரூ. 2904.18 கோடி சொத்தை ஒப்பிட்டால் இது கிட்டத்தட்ட 1950 கோடிகள் அதிகம். அது என்ன ரகசியம். அதை அனைத்து தரப்பினருடனும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். Oxfam's 'Inequality Virus Report'-அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் லாக்டவுன் போட்டதில் இருந்து முதல் இந்தியாவிலுள்ள 100 பில்லியனர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. 138 மில்லியன் ஏழை இந்திய மக்களில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.94,045 வழங்க போதுமான அளவுக்கு சொத்து பெருகியுள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு தயாநிதி மாறன் லோக்சபாவில் உரையாற்றினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+