Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேதி சொல்லுங்க! மகளிர் இடஒதுக்கீட்டில் தமிழ் பழமொழி கூறி பாஜகவை விளாசிய திமுக எம்பி கனிமொழி சோமு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று நாடாளுமன்ற ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ‛‛கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை'' என தமிழ் பழமொழியை சுட்டிக்காட்டி கனிமொழி எம்பி பரபரப்பாக பேசினார். அதோடு 33 சதவீத இடஒதுக்கீட்டு அமலுக்கு வரும் தேதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முழங்கினார்.

நாடாளுமன்றம், சட்டசபையில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது.

DMK MP Kanimozhi Somu asked the date of implementation of the Womens Reservation Bill in Rajya Sabha

இந்நிலையில் தான் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு குறித்த விவாதத்தில் ராஜ்யசபாவில் திமுக எம்பி கனிமொழி சோமு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

முதலில் நான் இந்த மசோதாவுக்கு ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். நூறாண்டுகளுக்கு முன்பே பெண்களின் சுதந்திரம் குறித்து பெரியார் பேசியுள்ளார். பெண்களிடம் இருந்து கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுத்தால் போதும் என கூறியுள்ளார். பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது எங்களின் உரிமை.

திராவிட இயக்கம் என்பது அனைவருக்குமானது. சமூக நீதியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. பெரியார் அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர்.

சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவி, கல்வி உதவித்தொகை, அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே தமிழ்நாடு அரசு ரோல் மாடலாக இருக்கிறது.

இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மகளிர் 2029 வரை காத்திருக்க வேண்டி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. மக்கள்தொகை, தொகுதி மறுவரையறைக்கு பிறகு அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால் ‛‛கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை'' என்பது போல் உள்ளது.

இதனால் இந்த மகளிர் இடஒதுக்கீட்டை 2024 நாடாளுமன்ற தேர்தலில் கொண்டு வர வேண்டும். அதோடு 33 சதவீத இடஒதுக்கீட்டு சட்டம் அமலுக்கு வரும் தேதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்'' என முழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+