அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்.. தப்பித்தவறி கூட இதை செஞ்சிடாதீங்க.. ஆதார் ஆணையம் மக்களுக்கு வார்னிங்
டெல்லி: ஆன்லைன் மோசடிகள் மற்றும் மெய்நிகர் முறையில் நடைபெற்று வரும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதார் விவரங்களை பகிரக்கூடாது என்றும் இந்திய தனித்து அடையாள ஆவணமான (UIDAI) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மாநில அரசுகளின் எந்த ஒரு நலத்திட்டங்களுக்கும் தற்போது ஆதார் கட்டாயமாக கேட்கப்படுகிறது.
12 இலக்க எண்களைக் கொண்ட ஆதார் அட்டையில் ஒருவவரது கை ரேகை பதிவு , பெயர், புகைப்படம் என அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளன.

அவசியம் இன்றி பகிரக்கூடாது
இதன் காரணமாக, மோசடிகளை தவிர்த்து பயனாளிகளுக்கு உரிய முறையில் நலத்திட்டங்கள் சென்று சேர்வதை ஆதார் மூலமாக உறுதிப்படுத்த முடியும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல், வங்கிக் கணக்கு எண் தொடங்குவதற்கு, செல்போன் சிம் கார்டு வாங்க என அரசு திட்டங்களை தவிர்த்து பிற சேவைகளுக்கும் ஆதார் எண்ணே முதன்மையானதாக கேட்கப்படுகிறது. ஆதார் எண்ணை யாருடனும் அவசியம் இன்றி பகிரக்கூடாது என்று ஆதார் ஆணையம் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி வருகிறது.

அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களிடம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் பொது தளங்களிலும் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியிருப்பதாவது:- சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதார் எண்ணை பொதுமக்கள் பகிரங்கமாக பகிரக் கூடாது. அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களிடம் ஆதார் ஓடிபி எண்ணை பகிரக்கூடாது.

விர்சுவல் ஐடியை பயன்படுத்தலாம்
அதேபோல், ஆதார் எம். பின் (பாஸ்வேர்டு) பகிர்வதையும் தவிர்க்க வேண்டும். அதேபோல், குடியிருப்பு வாசிகள் ஆதார் கடிதம், பிவிசி கார்டு, அல்லது அதன் நகல் ஆகியவற்றை அலட்சியமாக விட்டுவிட்டு செல்லக்கூடாது. வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்றவற்றை பத்திரமாக கையாள்வதை போல ஆதார் அட்டைகளையும் கையாள வேண்டும். ஆதார் எண்ணை பகிர விரும்பாதபட்சத்தில் மெய்நிகர் எண் எனப்படும் விர்சுவல் ஐடியை பயன்படுத்தலாம்.

அன்லாக்கிங் செய்து கொள்ள முடியும்
ஆதார் இணையதளத்தில் இந்த ஐடியை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆதார் எண்ணிற்கு பதிலாக இந்த விர்ச்சுவல் ஐடியை பயன்படுத்த முடியும். அதேபோல், ஆதார் எண்ணை பயோமெட்ரிக் முறையில் லாக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு ஆதாரை பயன்படுத்த வேண்டியது இல்லையென்றால் லாக்கிங் செய்து கொள்ள முடியும். தேவைப்படும் சமயத்தில் அன்லாக்கிங் செய்து கொள்ள முடியும்.

ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க..
ஆதார் அட்டையுடன் இமெயில் இணைப்பதன் மூலம் ஆதார் எண் மின்னணு முறையில் பயன்படுத்தும் போது அது குறித்த அலார்ட் மெசேஜ் ஒவ்வொரு முறையும் இமெயில் மூலமாக தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகள் மற்றும் மெய்நிகர் முறையில் நடக்கும் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால், ஆதார் எண்களை நம்பகமற்ற தளங்களில் பகிர்ந்து அதன்மூலமாக நடைபெறும் மோசடி வலைப்பின்னல்களுக்குள் சிக்கி விடக்கூடாது என்பதை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் ஆதார் ஆணையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications