Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜபக்சே வீட்டிற்கு தீயா! இரக்கமே காட்டாதீங்க.. பொங்கி எழுந்த சு.சாமி.. என்ன சொன்னார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கையில் எம்பிக்களை சுடும் நபர்களுக்கும், இலங்கையில் கலவரம் செய்பவர்களுக்கும் இரக்கமே காட்ட கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போராட்டத்திற்கு இடையில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கையில் நடந்த கலவரத்தில் மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு தீ வைக்கப்பட்டது. பல ஆளும் கட்சி எம்பிக்களின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன.

இந்த கலவரத்தின் போது இரண்டு போராட்டக்காரர்களை ஆளும் இலங்கை பொதுஜன முன்னணி எம்பி அமரகீர்த்தி அதுகோரலா துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலியானார். அதன்பின் அந்த எம்பி தன்னை தானே சுட்டுக்கொண்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆளும் கட்சி எம்பிக்கள் போராட்டக்காரர்கள் மூலம் இவர் கொலை செய்யப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

பாஜக

பாஜக

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் வீட்டிற்கு தீ வைப்பவர்களுக்கு இரக்கம் காட்ட கூடாது. எம்பிக்களை சுடும் நபர்களுக்கும், இலங்கையில் கலவரம் செய்பவர்களுக்கும் இரக்கமே காட்ட கூடாது. நமது அண்டை நாடு இன்னொரு லிபியா போல மாறிவிட கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இலங்கையில் நடக்கும் மோதல்கள் காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியான பாதிப்புகள், சிக்கல்கள் ஏற்படலாம் என்று பலர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுப்பிரமணியன் சாமி

சுப்பிரமணியன் சாமி

கடந்த 3 வருடங்களுக்கு முன்புதான் ஐஎஸ் அமைப்புகள் இலங்கையில் சர்ச் தாக்குதல்களை நடத்தின. இந்த தாக்குதல்கள் காரணமாக அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு ஆட்சி அதிகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நாட்டிலும் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும் அபாயம் உள்ளது. இது இந்தியாவிற்கும் சிக்கலாகலாம் என்று பலர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோரிக்கை

கோரிக்கை

முன்னதாக இலங்கையில் போராட்டம் மற்றும் கலவரம் நடக்கும் நிலையில் அந்நாட்டிற்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பி அரசியலமைப்பு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவிற்கு எதிரான அந்நிய சக்திகள் இலங்கை விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Mahinda Rajapaksa-வுக்கு மரண அடி | Su-30 MKI Fighter இந்தியா எடுத்த அதிரடி முடிவு | Oneindia Tamil
    விளக்கம்

    விளக்கம்

    இந்திய உயர் கமிஷன் இதற்கு அளித்த விளக்கத்தில், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பும் திட்டத்தில் நாங்கள் இல்லை. சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இந்தியா அந்த நிலைப்பாட்டில் இல்லை. இந்தியா இலங்கையின் நிலைத்தன்மை, ஜனநாயகம், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை விரும்புகிறது. இலங்கையின் கொள்கைகளில் இந்தியா நம்பிக்கை கொண்டு இருக்கிறது. இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் உணர்வுகளை இந்தியா எப்போதும் மதிக்கும், என்று இந்திய உயர் கமிஷன் விளக்கம் கொடுத்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+