இந்த "இரு" இடங்களில் குடையுதா?.. யாரோ ஊசியால் குத்துவது போல் உள்ளதா?.. அப்ப அது ஓமிக்ரான் அறிகுறி!
டெல்லி: இந்த இரு இடங்களில் வலி இருந்தால் ஓமிக்ரான் பாதிப்பு இருப்பதாக அர்த்தம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்சிகிரான், டெல்டாகிரான், ஓமிக்ரான் என வரிசையாக கொரோனா வகைகள் உலக நாடுகளை பதம் பார்த்து வருகின்றன. தற்போது தான் கொரோனாவின் தாக்கம் குறைகிறது. அதற்குள் இன்னொரு வேரியண்ட் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமிக்ரான் டெல்டாவை காட்டிலும் வேகமாக பரவி வந்தாலும் அதன் தாக்கம் என்பது குறைவாகவே இருந்தது. பொதுவாக காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், உடல் சோர்வு, சுவையின்மை, வாசனையின்மை உள்ளிட்டவை கொரோனாவுக்கு அறிகுறியாக சொல்லப்பட்டு வந்தது.

நிறைய மாற்றங்கள்
தற்போது புதிய புதிய வேரியண்ட்கள் வந்துள்ளதால் அறிகுறிகளிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஓமிக்ரானை பொருத்தமட்டில் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு கொண்டு போய் விடுவதில்லை என்றே தெரிகிறது. உடலில் இரு இடங்களில் வலி இருந்தால் ஒருவருக்கு ஓமிக்ரான் இருப்பதை கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள்.

கொரோனா வைரஸ்
தசை வலி என்பது பொதுவாக கொரோனா வைரஸின் அறிகுறியாகும். அது போல் ஓமிக்ரானில் தசை வலி, தசை பிடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுகின்றன. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட போது பெரும்பாலான மக்கள் மியால்கியா எனப்படும் தசை வலியுடன் சிகிச்சைக்கு வந்தததாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

புள்ளி விவரங்கள்
உலகம் முழுவதிலும் ஓமிக்ரான் பாதித்தவர்களின் புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் போது பெரும்பாலானோருக்கு லேசான மூச்சுத் திணறலுடன் அதிக தசை வலி இருந்தது அறியப்படுகிறது. மூக்கு ஒழுகுதல், உடல் வலி, நெஞ்சு வலி, முதுகு வலி, சோர்வு ஆகியவையும் ஓமிக்ரான் அறிகுறிகள் ஆகும். ஓமிக்ரான் பாதித்தவர்களுக்கு கால்களிலும் தோள்களிலும் அதிக வலி ஏற்படுகிறது.

ஓமிக்ரான் பாதிப்பு
கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா வைரஸ் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதித்ததை நாம் அறிவோம். ஆனால் ஓமிக்ரானால் கால்களும் தோள்களும் மட்டுமே பாதிக்கப்படுகின்றன. ஓமிக்ரான் தொற்று பாதிப்பின் போது தசை வலி என கூறிய நோயாளிகள் பெரும்பாலும் கால்களிலும் தோள்களிலும் அதிகம் வலிப்பதாகவே தெரிவித்தனர் என பிரிட்டன் ஆய்வுகள் கூறுகின்றன.

கால்களில் வலி
கால்கள் வீங்கியது போல் இருக்கும். ஊசியால் வைத்து குத்துவது போல் வலி இருக்கும். கால்களில் மட்டும் ஏன் வலி இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் ஏற்கெனவே பரவிய வேரியண்டுகளை விட இந்த ஓமிக்ரான் தசை கூட்டை அதிகம் பாதிப்பதால் தசைகள், எலும்புகள், முட்டி கூடும் இடங்களில் வலி இருக்கலாம் என்றார்கள். உடல் வலியும் ஓமிக்ரானின் பொதுவான அறிகுறி என சொல்லப்பட்டாலும் சளி, தலைவலி, சோர்வு, தும்மல், தொண்டை கரகரப்பு ஆகிய 5 முக்கிய அறிகுறிகளில் உடல் வலி இடம் பெறவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications