டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு வெளியீடு! கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ26 லட்சம் உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு விவரங்களை பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பிரதமர் மோடி தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 31 ஆம் தேதி தனக்கு உள்ள சொத்து விவரங்களை பகிர்ந்துள்ளார். இது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அமளி, ஆவேசங்களிடையே.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் 2 அவைகளிலும் 5 மசோதாக்கள் நிறைவேற்றம் அமளி, ஆவேசங்களிடையே.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் 2 அவைகளிலும் 5 மசோதாக்கள் நிறைவேற்றம்

 26 லட்சம் உயர்வு

26 லட்சம் உயர்வு

இதன்படி, பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 26 லட்சம் உயர்ந்துள்ளது. மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 - கோடியாக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடிக்கு சொந்தமாக அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை. அதேபோல், பத்திரங்களிலும் எதிலும் முதலீடு செய்யவில்லை. பெரும்பாலும் வங்கி டெபாசிட்களாகவே வைத்துள்ளார். பங்குச்சந்தைகள் அல்லது மியூட்சுவல் பண்ட் ஆகியவற்றில் பிரதமர் மோடி முதலீடு எதுவும் செய்யவில்லை.

 4 தங்க மோதிரங்கள்

4 தங்க மோதிரங்கள்

சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை. அதேவேளையில், பிரதமர் மோடி சொந்தமாக 1.73 லட்சம் மதிப்பு கொண்ட 4 தங்க மோதிரங்கள் வைத்துள்ளார். கடந்த ஆண்டை விட பிரதமர் மோடியின் அசையும் சொத்துக்கள் மதிப்பு 26.13 லட்சம் உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி தனக்கு சொந்தமாக இருந்த ரூ.1.1 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை தானமாக பிரதமர் மோடி வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

 தானமாக வழங்கிய மோடி

தானமாக வழங்கிய மோடி

கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் சொத்துப்பட்டியலில் 2002-ம் ஆண்டு காந்திநகரில் (சர்வே எண் 401/A) ஒரு குடியுருப்பு மனையை மேலும் மூன்று பேருடன் இணைந்து வாங்கியதாகத் தெரிவித்திருந்தார். அந்த இடத்தின் மதிப்பு சந்தை மதிப்பில் ரூ.1.04 கோடியாக இருந்தது. அந்த இடத்தை பிரதமர் மோடி தானமாக வழங்கியுள்ளார். பிரதமர் மோடி தன்னிடம் ரொக்கமாக 35 ஆயிரத்து 250 ரூபாய் மட்டுமே வைத்திருக்கிறார். மேலும் பிரதமர் மோடியின் வங்கி இருப்பும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 31ன்படி ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்து 480 இருந்தது. இப்போது, ரூ.46 ஆயிரத்து 555 ஆக இருக்கிறது.

 ராஜ்நாத் சிங்கின் சொத்து மதிப்பு

ராஜ்நாத் சிங்கின் சொத்து மதிப்பு

தேசிய சேமிப்புப்பத்திரங்களுடன் அஞ்சலக சேமிப்பாக ரூ.9 லட்சத்து 5 ஆயிரத்து 105 ரூபாய் வைத்துள்ளார். ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 305 மதிப்புக்கு லைப் இன்சூரன்ஸ் பாலிசியும் பிரதமர் மோடி எடுத்துள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். இதன்படி அவருக்கு அசையும் சொத்துக்களாக ரூ.2.54 கோடியும் அசையா சொத்துக்களாக 2.97 கோடியும் உள்ளது. அதேபோல், தர்மேந்திர பிரதான், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஆர்.கே சிங், ஹர்தீப் சிங் பூரி, பர்ஷோத்தம் ரூபாலா, ஜி கிஷன் ரெட்டி, முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோரும் தங்கள் சொத்து விவரங்களை பகிர்ந்துள்ளனர்.

English summary
Indian Prime Minister Modi's net worth has been revealed. With this, Prime Minister Modi's property value has increased by Rs 26 lakh compared to last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X