களவு போகும் அணுஆயுத தகவல்கள்! ஜிமெயில்களை ஹேக் செய்யும் வடகொரிய ஹேக்கர்கள்! ஆய்வாளர்கள் பகீர் தகவல்!
டெல்லி: ஜிமெயில்களில் வரும் மெயிலையும் அதில் உள்ள ஃபைல்களையும் வடகொரிய ஹேக்கர்கள் படிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கணினியை ஊடுருவுவது, செல்போனை ஹேக் செய்வது, வங்கி கணக்கை முடக்குவது என ஹேக்கர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் மூலம் பல மோசடிகளையும் அரங்கேற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் வடகொரிய ஹேக்கர்கள் ஜிமெயிலில் வரும் மெயில்களையும் கோப்புகளையும் படித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்னதான் ஜிமெயிலில் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் செய்திருந்தாலும் அவர்கள் ஹேக் செய்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மால்வேர்
அதாவது Volexity எனும் நிறுவனத்தின் SHARPEXT எனும் மால்வேரை பயன்படுத்தி வடகொரிய ஹேக்கர்கள் மெயில்களை ஹேக் செய்கிறார்கள். இது ஒரு ஆண்டுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் அல்லது மைக்ரோசாப்ட் எட்ஜில் இருந்து உள்ளே நுழைகிறது.

வடகொரிய
இந்த மால்வேரை பயன்படுத்தும் வடகொரிய நிறுவனத்தின் பெயர் Sharp Tongue ஆகும். இந்த ஹேக்கர்களுக்கு வடகொரிய அரசு நிதி அளிக்கிறது. இந்த SHARPEXT எனும் மால்வேர் அமெரிக்கா, ஐரோப்பா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் அணுஆயுதங்களை குறி வைக்கிறது. இதன் மூலம் அந்த நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

ஜிமெயில் அக்கவுண்ட்
இந்த சாப்ட்வேர் மூலம் ஜிமெயில் அக்கவுண்டின் பாஸ்வேர்ட்டை ஹேக்கர்கள் திருடுவதில்லை. அதற்கு பதிலாக ஜிமெயில் கணக்கிலிருந்து நேரடியாக ஆய்வு செய்து தரவை திருடுகிறது. இதுவரை ஆசியாவில் ஜிமெயிலை ஹேக்கர்கள் ஹேக் செய்ததாக தகவல்கள் ஏதும் இல்லை.

400 மில்லியன் டாலர்
இந்த சாப்ட்வேர் விண்டோஸில் மட்டும் வேலை செய்யும். லைனக்ஸ், Mac ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டங்களில் இயங்காது. கடந்த ஆண்டு 400 மில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ கரன்சியை வடகொரிய ஹேக்கர்கள் திருடியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ஹேக்கர்களை சமாளிக்க குரோம் ஓஎஸ் உள்ளிட்டவை திறம்பட செயல்படும்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications