ஸ்டேன்டட்டீஸ்- அட்டேன்ஷென்.. குனிந்து நிமிர்ந்து இந்த ஒட்டகச்சிவிங்கி செய்வதை பாருங்க! வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒவ்வொரு ஜீவராசிகளும் ஒவ்வொரு செயலை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யும். இந்த உலகில் எல்லாமே அழகு என சொல்லக் கூடிய அளவுக்கு அழகு கொட்டி கிடக்கிறது.

மிருக காட்சி சாலை, விலங்கியல் பூங்கா, பறவைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை காண சிறுவயதிலிருந்தே ஆர்வம் அதிகம்!

ஒவ்வொரு விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு முட்டையிட்டு குஞ்சு பொறிக்கிறது, குட்டிகளை ஈன்றெடுக்கிறது, அதன் வாழ்வியல் முறை என்ன என்பதை புத்தகங்களில் படித்திருப்போம்.

உணவு

உணவு

ஆனால் நேரில் சென்று காணும் பாக்கியம் பெற்றால் அந்த நினைவுகளே தனிதான். இன்னும் சில விலங்கியல் பூங்காக்களில் குட்டிகளுக்கு பொதுமக்கள் உணவளிக்கவும் வகை செய்யப்பட்டிருக்கும். அது போல் குரங்கு, கொரில்லா, மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு அது என்ன சாப்பிடுமோ அந்த உணவை வழங்கலாம்.

வயிறு நிரம்பும்

வயிறு நிரம்பும்

இதில் அவைகளுக்கு வயிறு நிரம்பும். நமக்கும் மன திருப்தி இருக்கும். அது போல் தெருக்களில் வரும் யானைகள், கோயில்களில் இருக்கும் யானைகளுக்கு வாழைப்பழம், தேங்காய், கரும்பு கொடுப்பதையும் நாம் வாடிக்கையாக உள்ளது. அது போல் புறா, காக்கை, பறவைகளுக்கும் தானியங்களையும் வழங்கி மகிழ்வோம்.

 வீடியோ வைரல்

வீடியோ வைரல்

தற்போது சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒட்டச்சிவிங்கி ஒன்று அதற்கு தேவையான புற்களை எப்படி சாப்பிடுகிறது என்பது குறித்த வீடியோதான் அது. அந்த வீடியோவில் அந்த ஒட்டச்சிவிங்கியை பார்க்கும் போது நமது சிறு வயது நினைவுகள்தான் வருகிறது.

டிரில்

டிரில்

பள்ளிகளில் நடத்தப்படும் டிரில்லின் போது ஸ்டேன்டட்டீஸ், அட்டேன்ஷன் என சொல்வதுண்டு. ஸ்டேன்டட்டீஸ் என்றால் கால்களை விரித்து நிற்க வேண்டும். அட்டேன்ஷன் என்றால் கால்களை சேர்த்து வைக்க வேண்டும். அதே போல் இந்த ஒட்டச்சிவிங்கியும் தனது முன்னங்கால்கலை விரித்துக் கொண்டு புற்களை கவ்வுகிறது. பின்னர் கால்களை சேர்த்துக் கொண்டு அசை போடுகிறது. அது ஒட்டகச்சிவிங்கிகள் தண்ணீரையும் கால்களை விரித்து கொண்டு குடிக்கின்றன வீடியோவையும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+