டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தண்ணீ தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்.. மதுக்கடையில் என்ன நடக்குத்துன்னு பாருங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: அனைத்து வகை மதுபானங்கள் விலையும் 70 சதவீதம் உயர்த்தப்பட்ட போதிலும் டெல்லியின் சந்தர் நகரில் திறக்கப்பட்ட மதுக்கடை முன்பு இரண்டாவது நாளாக மதுபானங்கள் வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

Recommended Video

    Opening of liquor shops by bursting crackers in Kolar district

    கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக மோசமாக பாதிக்கப்பட்ட நகரம் என்றால் அது டெல்லி. இந்தியாவின் தலைநகரான டெல்லி வெறும் நகரம் என்பது மட்டுமல்லாமல் ஒரு குட்டி மாநிலமாக உள்ளது. ஆனால் அதேநேரம் மக்கள் அடர்த்தி என்பது இந்தியாவின் வேறு எங்கும் இல்லாத அளவு ஆகும். கோடிக்கணக்கான மக்கள் டெல்லியில் வசிக்கிறார்கள்.

    Drunken crowd in Delhi: disturbing scenes at opened liquor store in Chandar Nagar in Delhi

    இந்நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக மார்ச 25ம்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சுமார் 40 நாட்களுக்கு பிறகு டெல்லியில் நேற்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    இதனால் உற்சாகம் அடைந்த மதுப்பிரியர்கள் எப்படியாவது மது வாங்கிவிட வேண்டும் என்று நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். சமூக இடைவெளியை பற்றி குடிமகன்கள் சுத்தமாக கவலைப்படவில்லை, எப்படியாவது மது வாங்கிட வேண்டும் என்ற வேகம் மட்டுமே அவர்களிடம் இருந்தது.

    விடிவதற்குள் அடுத்தடுத்த கேஸ்கள்.. ஒரே இரவில் 25 பேருக்கு கொரோனா.. விழுப்புரத்தில் மோசமாகும் நிலை! விடிவதற்குள் அடுத்தடுத்த கேஸ்கள்.. ஒரே இரவில் 25 பேருக்கு கொரோனா.. விழுப்புரத்தில் மோசமாகும் நிலை!

    இந்நிலையில் டெல்லி அரசு அனைத்து வகை மதுபானங்கள் விலையையும் 70 சதவீதம் உயர்த்தி உள்ளது.ஆனால் மதுபானங்களின் விலை உயர்வை பற்றி சிறிதும் கவலைப்படாத குடிமகன்கள் டெல்லியின் சந்தர் நகரில் திறக்கப்பட்ட மதுக்கடை முன்பு மது வாங்க ஆயிரக்கணக்கில் திரண்டனர்.

    எப்படியும் மது வாங்கிவிட வேண்டும் என்று ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி சென்ற காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுவால் இத்தனை நாட்களாக கடைபிடித்து வந்த சமூக இடைவெளி காணாமல் போய் உள்ளது.


    ஒருவேளை கொரோனா அதிகரித்தால் அதற்கு மதுக்கடைகள் முக்கிய காரணமாக இருக்கும் என்பதற்கு கீழ்க்கண்ட வீடியோ காட்சிகளே சாட்சி. இது வெறும் டெல்லிக்கு மட்டுமல்ல.. மொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். மதுக்கடைகள் இல்லாமல் 40 நாட்களுக்கு மேல் மக்களால் இருக்க முடிந்தது. ஆனால் மது வருமானம் இல்லாமல் பல மாநில அரசுகளால் இயங்க முடியவில்லை என்ற கசப்பான உண்மையை இந்த காட்சிகள் எடுத்துக்காட்டுக்கின்றன.

    English summary
    This is despite the hike of 70 percent in the cost of all kinds of liquor. Second day of opened liquor store in Chandar Nagar in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X