சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு நற்செய்தி..இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
டெல்லி: இந்திய நாடாளுமன்றம், சட்டமன்ற வேட்பாளர்களின் செலவு வரம்பை இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை உயர்த்தியுள்ளது.
நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செலவு உச்ச வரம்பு ரூ.54 லட்சம்-ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சம்-ரூ.90 லட்சமாக உயர்ந்தபட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ரூ.20 லட்சம்-ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.28 லட்சம்-ரூ.40 லட்சமாகவும் செலவு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் செலவு வரம்பு உயர்வு
அதாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.95 லட்சம் வரையிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சம் வரையிலும் செலவு செய்யலாம். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் இந்த முடிவினை எடுத்ததா அதிகபட்ச தேர்தல் செலவு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து தேர்தல்களிலும் பொருந்தும்
இந்த திருத்தப்பட்ட வரம்புகள் சட்டம், நீதி மற்றும் சட்டமன்றத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியுள்ளது. இந்த திருத்தப்பட்ட வேட்பாளர்களுக்கான செலவு வரம்புகள் இனிமேல் வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச தேர்தல்
அதாவது விரைவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் என்ற நிலையில் இந்த தேர்தலில் இருந்தே வேட்பாளர்களுக்கான புதிய செலவு வரம்புகள் நடைமுறைக்கு வரும். கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பில் பெரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டது,

குழு அமைப்பு
இதனை தொடர்ந்து 2020-ல் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு மேலும் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதே ஆண்டில், செலவுக் காரணிகள் மற்றும் பிற தொடர்புடைய சிக்கல்களை ஆய்வு செய்யவும், பொருத்தமான பரிந்துரைகளை வழங்கவும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு குழுவையும் அமைத்தது. இந்தக் குழு அரசியல் கட்சிகள், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம் செலவு உச்ச வரம்பு குறித்த பரிந்துரைகளை கேட்டு அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications