டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அகஸ்டா வெஸ்ட்லேண்ட்.. குற்றப்பத்திரிக்கையில் ''மிஸஸ் காந்தி'' பெயர் சேர்ப்பு.. புதிய திருப்பம்!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் திடீர் திருப்பமாக நேற்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ''மிஸஸ் காந்தி'' என்ற பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் திடீர் திருப்பமாக நேற்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ''மிஸஸ் காந்தி'' என்ற பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 நவீன ஹெலிகாப்டர்கள் வாங்க கடந்த 2010 பிப்ரவரியில் ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டது.

ஆனால் இதில் காங்கிரஸ் தலைவர்களின் உதவியுடன் ஊழல் நடந்து இருக்கிறது. இடைத்தரகர்கள் மூலம் இந்தியாவில் சில முக்கியஸ்தர்களுக்கு லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இந்த வழக்குதான் தற்போது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அத்வானியின் ஆவேச கருத்து.. ஓடி வந்து உடனே பதில் சொன்ன நரேந்திர மோடி!அத்வானியின் ஆவேச கருத்து.. ஓடி வந்து உடனே பதில் சொன்ன நரேந்திர மோடி!

யார் இவர்

யார் இவர்

இந்த வழக்கில் பிரிட்டனை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதற்கான குற்றப்பத்திரிக்கை சில மாதங்களுக்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டது. இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரி மற்றும் லெட்டர்களில் பல முக்கிய ஆதாரங்கள் இருந்தது.

என்ன டைரி

என்ன டைரி

அதில் ''மிஸஸ் காந்தி'' ''ஏபி - அஹமது பட்டேல்'' ''இத்தாலி பெண்ணின் மகன்'' ''வருங்கால இந்திய பிரதமர்'' என்ற பெயர்கள் இருந்தது. இதைதான் தற்போது அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இதில் தற்போது துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மிஸஸ் காந்தி பெயர்

மிஸஸ் காந்தி பெயர்

நேற்று தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிக்கையில் ''மிஸஸ் காந்தி'' என்ற பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. அதேபோல் அஹமது பட்டேல் என்ற பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால் இவர்கள் யார், இவர்களுக்கும் இந்த முறைகேட்டிற்கு என்ன தொடர்பு என்று கூறப்படவில்லை.

நாளை

நாளை

மேலும் இவர்களின் பெயர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக இதில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் மிஸஸ் காந்தி என்பவர் யார் என்ற விவரமும் இதில் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கு மீதான விசாரணை பட்டியாலா நீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்பட உள்ளது. தேர்தல் நேரத்தில் சரியாக இந்த வழக்கு விசாரிக்கப்படுவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
ED names Mrs. Gandhi in the new charge sheet of AgustaWestland case yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X