கத்தரிக்கோலால் 5-ம் வகுப்பு தலித் மாணவியை குத்தி.. மாடியில் இருந்து வீசிய ஆசிரியை.. டெல்லியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வகுப்பறையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் 5-ம் வகுப்பு தலித் மாணவியை கத்தரிக்கோலால் குத்திய ஆசிரியை, அச்சிறுமியை மாடியி்ல இருந்து கீழே வீசிய பயங்கர சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

இந்தக் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான அந்த 9 வயது சிறுமி தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல், மாணவி மீது இத்தகைய கொடூர தாக்குதல் நடத்திய ஆசிரியைக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வன்முறை நிகழ்த்தும் ஆசிரியர்கள்..

வன்முறை நிகழ்த்தும் ஆசிரியர்கள்..

சமீபகாலமாக, மாணவர்கள் மீது ஆசிரியர்கள் அதிகப்படியான வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை பார்க்க முடிகிறது. மாணவர்களை பெற்றோர்கள் ஸ்தானத்தில் கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இருக்கிறதுதான். யாரும் மறுக்கவில்லை. ஆனால், கண்டிப்பு என்ற பெயரில் தங்கள் மனதில் இருக்கும் வன்மத்தையும், குரூரத்தையும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் அண்மைக்காலங்களில் நிகழும் சம்பவங்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படுகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன.

காட்டுமிராண்டித்தனம்..

காட்டுமிராண்டித்தனம்..

வீட்டுப்பாடம் செய்து வராத மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர், உயர் ஜாதி வகுப்பினர் தண்ணீர் குடிக்கும் பானையில் நீர் அருந்தியதால், தாழ்த்தப்பட்ட மாணவனை அடித்துக் கொலை செய்த ஆசிரியர் என்பன போன்ற செய்திகள் பதைபதைக்க செய்கின்றன. சில ஆசிரியர்கள் ஏன் இப்படி காட்டுமிராண்டிகளை போல நடந்துகொள்கிறார்கள் என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. அப்படியொரு கொடூர சம்பவம்தான் டெல்லியில் தற்போது நடந்துள்ளது.

வேடிக்கை பார்த்த சிறுமி

வேடிக்கை பார்த்த சிறுமி

டெல்லியின் கரோல்பாக் பகுதியைச் சேர்ந்தவர் வந்தனா (9). இவர் அங்குள்ள பாலிகா வித்யாலயா பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். பாலிகா வித்யாலயா என்பது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் படிப்பதற்காக மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளி ஆகும். இந்தப் பள்ளியில் கீதா (30) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக இருக்கிறார். இந்நிலையில், இன்று பிற்பகல் ஆசிரியை கீதா வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி வந்தனா, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை கீதா, வந்தனா அருகே சென்று அவளது தலை முடியை பிடித்து இழுத்து அடித்தார்.

பால்கனியில் இருந்து தூக்கி வீசி..

பால்கனியில் இருந்து தூக்கி வீசி..

எனினும், கோபம் அடங்காத அவர், அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மாணவியின் தோளிலும், முதுகிலும் பலமாக குத்தினார். இதில் வந்தானவுக்கு ரத்தம் பீறிட்டு வந்து வலியில் அலறி துடித்தாள். இதை பார்த்த வகுப்பில் இருந்த மற்ற மாணவிகளும் பயத்தில் கத்தினர். ஆனாலும், விடாமல் வந்தனாவை தாக்கிய ஆசிரியை அவளை பால்கனியில் இருந்து தூக்கி வீசினார். பள்ளியின் இரண்டாம் தளத்தில் இருந்து கீழே விழுந்த சிறுமி வந்தனாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே மயங்கினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் பள்ளிக்கு விரைந்து வந்து ஆசிரியை கீதாவை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+