அசத்திட்டீங்க போங்க.. உலக அளவில் ’எக்ஸில்’ மாஸ் காட்டும் பிரதமர் மோடி! எலான் மஸ்க்கே வாழ்த்திட்டாரே!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை அவரது எக்ஸ் பக்கத்தில் 100.1 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் உலகத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்.
உலக அளவில் பல்வேறு சமூக வலை தளங்கள் இருந்தாலும் தங்கள் கருத்துக்களை பதிவிட பிரபலங்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக அது ட்விட்டர் என்ற பெயரில் உலக அளவில் செயல்பட்டு வந்தது.

அதில் கருத்து சுதந்திரம் முடக்கப்படுவதாகவும், தான் அந்த நிறுவனத்தை கைப்பற்றினால் அனைவருக்கும் கருத்து சுதந்திரத்திற்கு வெளிப்படையான ஆதரவு வழங்கப்படும் என எலான் மஸ்க் கூறியிருந்தார். சொன்னது போலவே அந்த நிறுவனத்தையும் அவர் வாங்கினார்.
ட்விட்டரை வாங்கிய உடனே அதற்கு எக்ஸ் என பெயரிட்டார் எலான். அது மட்டுமில்லாமல் மாதாந்திர கட்டணம், அதிக வார்த்தைகளுடன் செய்திகளை பதிவிடுவது, வருமானத்தை பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். இதை அடுத்து உலக அளவில் ட்விட்டரை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்களும் எக்ஸ் பக்கத்தில் அதிக அளவில் இணைந்தனர்.

தங்களது நிகழ்ச்சிகள், அறிக்கைகள், பேச்சு, பேட்டி உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிகழ்வுகளை எக்ஸ்-ல் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கிறார். குஜராத் முதலமைச்சர் ஆக இருந்தபோது அதாவது 2009 ஆம் ஆண்டு அவர் ட்விட்டரில் கணக்கை தொடங்கினார். அது மட்டும் அல்லாமல் பிரதமர் மோடிக்கு என்று தனியாக ஒரு யூடியூப் பக்கமும் இருக்கிறது. அதில் 25 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் அவரை ஃபாலோவ் செய்கின்றனர்.
மேலும் இன்ஸ்டாகிராமிலும் 91 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் எக்ஸ் பக்கத்தில் உலக அளவில் அதிக நபர்கள் ஃபாலோ செய்தும் நபராக பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்து இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் அவரை சுமார் 100.1 மில்லியன் ஃபாலோயர்கள் ஃபாலோவ் செய்கின்றனர். அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை 38.1 மில்லியன் ஃபாலோயர்களும், துருக்கி அதிபர் எர்டோகனை 21.5 மில்லியன் ஃபாலோயர்களும், ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமதுவை 11.2 மில்லியன் ஃபாலோயர்களும் , மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவலை 10.9 மில்லியன் ஃபாலோயர்களும், கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவை .6.5 மில்லியன் ஃபாலோயர்களும், இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனியை 2.4 மில்லியன் ஃபாலோயர்களும் பாலோ செய்கின்றனர்.
அந்த வகையில் உலக அளவில் அதிக ஃபாலோயர்களை கொண்ட தலைவராக உருவெடுத்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவைப் பொறுத்தவரை நான்கில் ஒரு பங்கு ஃபாலோயர்களும் தான் ராகுல் காந்திக்கு இருக்கின்றனர். அவரை 26.4 மில்லியன் ஃபாலோயர்கள் ஃபாலோவ் செய்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரை பின்பற்றுகின்றனர்.
உலக அளவில் பிரபலமான வீர விளையாட்டு வீரர்களான நெய்மர், விராட் கோலி உள்ளிட்டோரை சுமார் 60 மில்லியன் ஃபாலோயர்கள் மட்டுமே ஃபாலோ செய்வது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது நிறுவனமான எக்ஸ் பக்கத்தில் அதிக பேர் ஃபாலோவ் செய்யும் உலகத் தலைவரான பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"வாழ்த்துக்கள் பிரதமர் நரேந்திர மோடி அதிகம் பின்பற்றப்படும் உலகத் தலைவர் என்பதில் மகிழ்ச்சி" என கூறியுள்ளார்.
-
SpaceX: நினைச்சதொன்னு, நடந்ததொன்னு.. எலான் மஸ்க்-கிற்கே ஆனந்த கண்ணீர் வரவைத்த சம்பவம்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications