எனக்கே விபூதி அடிக்க பார்தல்ல.. இணையத்தை கலக்கிய எலான் மஸ்கின் பரோடி அக்கவுண்ட்.. முடக்கிய ட்விட்டர்!
டெல்லி: ட்விட்டரை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியநிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ட்விட்டரில் இந்தி பாடல் ஒன்றை எலான் மஸ்க் பதிவிட்டது போன்ற ஒரு ட்விட் இணையத்தில் பரவி வருகிறது.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை வாங்கினார்.
ட்விட்டரை வாங்கிய கையோடு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.

புளூ டிக் வசதிக்கு கட்டணம்
குறிப்பாக ட்விட்டர் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் தொடங்கிய மாற்றங்கள் முதல் புளூ டிக் வசதிக்கு கட்டணம் விதித்தது முதல் எலான் மஸ்க்கின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது. இதனால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முழுவதும் எலான் மஸ்க் குறித்த பேச்சுக்கள் நிரம்பியிருக்கின்றன.

மாதம் 8 டாலர்
எலான் மஸ்க் 8 டாலர் வசூலிக்கும் திட்டத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதையெல்லாம் ஏற்க மறுத்த எலான் மஸ்க், புளு டிக் வசதியை பெற மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என்ற முடிவில் திட்டவட்டமாக இருப்பதாக தெரிவித்து விட்டார். அதேபோல் ட்விட்டரில் நெட்டிசன்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என ஆக்டிவாக எலான் மஸ்க் இருந்து வருகிறார்.

போஜ்பூரி பாடலையும்
இந்த நிலையில், எலான் மஸ்க் இந்தியில் ட்விட் பதிவு போட்டதாக நெட்டிசன்கள் பலரும் வியந்து பார்த்தனர். அது மட்டும்கிடையாது போஜ்பூரி பாடலையும் எலான் மஸ்க் பெயரில் இந்த ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருந்து வேகமாக பரவியது. ஒருவரின் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதி செய்யும் புளூ டிக்கும் இருந்ததால் பலரும் இதை எலான் மஸ்க்கின் உண்மையான ட்விட்டர் கணக்கு என்றே நம்பிவிட்டனர்.

போலி அக்கவுண்ட்
ஆனால், எலான் மஸ்க்கின் ஒரிஜினல் அக்கவுண்டை அப்படியே பிரதி எடுத்தது போல டிபி படம் மற்றும் பயோ உள்ளிட்டவைகளை வைத்து @iawoolford என்ற யூசர் ஒருவர் போலியாக ( பரோடி) அக்கவுண்டை உருவாக்கியிருக்கிறார். அமெரிக்கா- ஆஸ்திரேலியரான இயான் வூல்போர்டு என்பவர்தான் இந்த அக்கவுண்டை கையாண்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மெல்போர்ன் நகரில் உள்ள லா ட்ரோபா பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி வகுப்பு எடுத்துவரும் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

முடக்கிய ட்விட்டர்
இந்தியை தவிர உருது, சமஸ்கிருதம், பெர்சியன் உள்ளிட்ட மொழிகள் சரளமாக தெரியுமாம். போஜ்பூரி மொழியை புரிந்து கொள்ளும் திறனும் கொண்ட இந்த பேராசிரியர் தான் எலான் மஸ்க் பெயரில் கேலியாக கிண்டலாக பதிவிடும் வகையில் பரோடி அக்கவுண்ட் உருவாக்கி பதிவிட்டு வந்து இருக்கிறார். தற்போது இந்த கணக்கை ட்விட்டர் முடக்கியுள்ளது. இயான் வூல்போர்டு ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டாலும் எலான் மஸ்க் அக்கவுண்ட் போலவே பல போலி கணக்குகள் ட்விட்டரில் பலரும் உருவாக்கி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து அதிரடிகள்
கருத்து பரிமாற்றங்களுக்கு முக்கிய சமூக வலைத் தளமாக விளங்கும் ட்விட்டரை கடந்த சில தினங்களுக்கு முன் உலகின் நம்பர் 1 பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கியிருந்தார். ட்விட்டரை வாங்கியதில் இருந்தே அடுத்தடுத்து அதிரடிகளை எலான் மஸ்க் காட்டி வருகிறார். குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் சி இ ஓவாக இருந்த இந்தியரான பராக் அகர்வாலை அதிரடியாக நீக்கினார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications