டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரொம்ப வலிக்கும்! வேக்சின் போட்டவர்களுக்கு ஏற்படும்.. மிக மோசமான ஓமிக்ரான் கொரோனா அறிகுறி!

Google Oneindia Tamil News

டெல்லி: ஓமிக்ரான் கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கும் கூட சில கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா காரணமாகக் கடந்த ஜனவரி மாதம் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டது. இருப்பினும், வெகு விரைவாகவே வைரஸ் பாதிப்பு ஒட்டுமொத்தமாகக் கட்டுக்குள் வந்துவிட்டது.

நாட்டில் வேகமாக முன்னெடுக்கப்பட்ட கொரோனா வேக்சின் பணிகளே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இதனிடையே புதிய ஓமிக்ரான் அறிகுறிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

மீண்டும் பாசிட்டிவ்.. மீண்டும் தனிமை.. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி! மீண்டும் பாசிட்டிவ்.. மீண்டும் தனிமை.. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி!

ஓமிக்ரான்

ஓமிக்ரான்

இப்போது உலகெங்கும் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் BA.5 என்ற ஓமிக்ரான் துணை வேரியண்ட் காரணமாகவே ஏற்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஏற்பாடும் பாதிப்புகளில் சுமார் 95% வரை இந்த BA.5 வகையாகத் தான் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வேரியண்ட் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்கனவே பரவிவிட்டது.

 வலி மிகுந்தவை

வலி மிகுந்தவை

தொண்டை வலி, தலைவலி, இருமல், காய்ச்சல் ஆகியவை தான் ஓமிக்ரான் BA.5 வேரியண்ட்டின் முக்கிய அறிகுறியாக உள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வேக்சின் எடுத்துக் கொண்ட பின்னரும், எதிர்கொண்ட வலி மிகுந்த அறிகுறி குறித்த தகவல்களைப் பகிர்ந்து உள்ளார். வேக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்குப் பாதிப்பு லேசாகவே இருக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மருத்துவர்

மருத்துவர்

இது தொடர்பாக நுரையீரல் நோய் வல்லுநர் டாக்டர் மைக் ஹேன்சன் கூறுகையில், "எனக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் சோர்வு, காய்ச்சல், தொண்டைப் புண், மூக்கு ஒழுகுதல் மற்றும் இறுதியாக இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டன. குறிப்பாக முதல் மூன்று நாட்கள் அறிகுறிகள் மிகத் தீவிரமாக இருந்தது. அதை அனுபவிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. தண்ணீர் குடிக்கும்போதும், உணவைச் சாப்பிடும்போதும் தொண்டை வலி மிக மோசமாக இருந்தது.

உமிழ்நீர்

உமிழ்நீர்

எல்லாவற்றையும்விட உமிழ்நீரை விழுங்கும்போது கூட, மிக மிக வேதனையாகவும் வலி மிகுந்ததாகவும் இருந்தது" என்றார். இரண்டு டோஸ் வேக்சின் அல்லது பூஸ்டர் டோஸ் வேக்சின் எடுத்துக் கொள்ளும் 10 பேரில் 7 பேருக்கு இதுபோல கடுமையான தொண்டை வலி ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு அதிகபட்சமாக 5 நாட்கள் வரை தொண்டை வலி மோசமாக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

 தொண்டை வலி

தொண்டை வலி

தொண்டை வலி முதல் நாள் மிக மிக மோசமாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல தொண்டை வலி குறையும் என்றும் 5 நாட்களுக்குப் பின்னர் தொண்டை வலி முற்றிலும் சரியாகிவிடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மூச்சுவிடுவதில் சிரமம், மயக்கம், கை கால் வலி, உள்ளிட்டவை தான் இந்த ஓமிக்ரான் பாதிப்பின் முக்கியமான அறிகுறிகளாக உள்ளன.

Recommended Video

    Monkey Pox எப்படி பரவும்? *Health
    லேசானது

    லேசானது

    கொரோனா வைரஸ் இப்போது பெரும்பாலும் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. அதேநேரம் இனி வரும் காலங்களிலும் வைரஸ் பாதிப்பு அப்படியே இருக்கும் எனச் சொல்ல முடியாது. வரும் காலத்தில் வைரஸ் உருமாறும் சமயத்தில் அது கொரோனா வேக்சினில் இருந்து கூட தப்பும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

    English summary
    Vaccinated people Omicron's BA.5 subvariant symptoms: (வேக்சின் போட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா வைரஸ் அறிகுறிகள்) All things to know about Omicron's BA.5 subvariant sign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X