தொடர் அழுத்தம்.. பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கிற்கு தடை விதித்தது பேஸ்புக்.. இனி கணக்கு தொடங்க முடியாது!
டெல்லி: பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கிற்கு தடை விதித்து பேஸ்புக் உத்தரவிட்டுள்ளது. இவரின் பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக் செயல்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக்கின் இந்திய தலைமை மற்றும் பல்வேறு அதிகாரிகள் பாஜகவிற்கு ஆதரவாக முடிவுகளை எடுக்கிறார்கள் என்று புகார் உள்ளது.
முக்கியமாக பாஜகவின் தலைவர்கள் செய்யும் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக பேஸ்புக் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் உள்ளது. அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன கட்டுரை
இந்த கட்டுரைக்கு பிறகே பேஸ்புக் மீது தொடர் புகார்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக இந்தியாவின் பேஸ்புக் பாலிசி தலைவராக இருக்கும் அங்கி தாஸ் மீது அடுத்தடுத்து புகார்கள் வைக்கப்பட்டது. இவர் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான பாராளுமன்ற குழு பேஸ்புக்கிற்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருந்தது.

2 மணி நேரம்
இந்த விளக்க கூட்ட விசாரணை நேற்று நடந்தது. இரண்டரை மணி நேரம் பேஸ்புக் நிர்வாகிகள் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்பிக்கள் மூலம் விசாரிக்கப்பட்டனர். அங்கி தாஸ் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டாரா, மோடிக்கு ஆதரவாக போஸ்ட்களை பரப்பினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல் பாஜக தரப்பும் பேஸ்புக் நிர்வாகிகள் காங்கிரஸ் தரப்பிற்கு ஆதரவாக இருப்பதாக கேள்விகளை எழுப்பி வந்தது.

என்ன நடவடிக்கை
நேற்று இந்த கூட்டம் நடந்த நிலையில், தற்போது தெலுங்கானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கிற்கு தடை விதித்து பேஸ்புக் உத்தரவிட்டுள்ளது. இவரின் பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இனி இவர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க முடியாது. இன்ஸ்டாகிராமிலும் ராஜா சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜா சிங் வெறுப்பு பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் போஸ்ட் செய்ததாக புகார் அளிக்கப்பட்டு வந்தது.

யார் இவர்
இவர் பேஸ்புக் விதிகளை மீறிவிட்டார் என்று கூறி பேஸ்புக் இவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக பாஜக எம்எல்ஏ ராஜா சிங், இந்தியா வரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் இவர் மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்றும் என்றும் கூறி உள்ளார். ஆனால் இவருக்கு எதிராக அப்போது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இப்போது அழுத்தம் காரணமாக இவரின் கணக்கு நீக்கப்பட்டுள்ளது .
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications