டெல்லி விவசாய போராட்ட பகுதியில் கொல்லப்பட்ட இளைஞர்... யார் இந்த நிஹாங்ஸ் சீக்கியர்கள்? நடந்தது என்ன?
டெல்லி: டெல்லி விவசாய பகுதியில் 35 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிஹாங்ஸ் சீக்கியர்கள் அமைப்பின் மீது இந்த கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில் டெல்லி சிங்கு எல்லை பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு கால் மற்றும் கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தூக்கில் தொங்கிய நிலையில், உடல் முழுக்க சேதப்படுத்தப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நிஹாங்ஸ் சீக்கியர்கள் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

யார்?
இதில் கொலை செய்யப்பட்டவரின் பெயர் லக்பீர் சிங். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். டெல்லியில் விவசாய போராட்டம் நடக்கும் சிங்கு எல்லை பகுதிக்கு அருகே ஹரியானா சோனிபட் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக நிஹாங்ஸ் சீக்கியர்களுடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு இருக்கும் நிஹாங்ஸ் கேம்ப் ஒன்றில் இவர் வசித்து வந்துள்ளார்.

மோதல்
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு லக்பீர் சிங் தூங்காமல் கையில் சீக்கியர்கள் புனிதமாக கருதும் நூலான சார்பாலோ கிரந்த்தை கையில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. சீக்கியர்கள் வணங்கும் குரு கோவிந்த் சிங் உள்ளிட்ட பலரின் கவிதைகள், இலக்கியங்கள் இடம்பெற்ற புனித நூல்களில் இதுவும் ஒன்றாகும். இதை இழிவுபடுத்தும் வகையில் லக்பீர் சிங் இன்று அதிகாலை செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதை நிஹாங்ஸ் சீக்கியர்கள் பார்த்துள்ளனர்.

தாக்குதல்
இதையடுத்தே லக்பீர் சிங்கை நிஹாங்ஸ் கொடுமையாக தாக்கி உள்ளனர். இவர் தாக்கப்படும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அதில் நிஹாங்ஸ் சீக்கியர்கள் அவரை கொடுமையான ஆயுதங்கள் மூலம் மாறி மாறி தாக்கி உள்ளனர். இடையில் லக்பீர் சிங்கின் இடம், பெயர் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளனர். பின்னர் அவரின் கையில் இருந்து மணிக்கட்டை வெட்டி உள்ளனர். இந்த கொடூர சம்பவமும் வீடியோவாக பதிவாகி உள்ளது.

அவமதிப்பு
சார்பாலோ கிரந்த் புனித நூலை அவமதித்த காரணத்தால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்யுக்தா கிஷான் மோர்ச்சா விவசாய அமைப்பு தங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது. அதோடு நிஹாங்ஸ் சீக்கியர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

யார் நிஹாங்ஸ் சீக்கியர்கள்?
நிஹாங்ஸ் சீக்கியர்கள் என்பவர்கள் ஆயுதம் ஏந்திய சீக்கிய போராளி குழுவாகும். தங்களை நிஹாங்ஸ் சீக்கியர்கள் அல்லது அகாலி சீக்கியர்கள் என்று இவர்கள் அழைத்துக்கொள்வார்கள். அதாவது அழிவு இல்லாத போராளிகள். குரு ஹர்கோபிந்த் என்பவரால் இந்த பிரிவு தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் சீக்கியர்கள் நடத்திய பெரும்பான்மையான போர்களில் நிஹாங்ஸ் சீக்கியர்கள்தான் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications