3 ஆண்டுகளுக்கு பிறகு.. மக்களிடம் பண புழக்கம்.. களைகட்டிய தீபாவளி.. ஆன்லைனில் 27% அதிகரித்த ஷாப்பிங்
டெல்லி: 3 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி பண்டிகை களை கட்டி வருகிறது. மேலும் பெஸ்டிவல் சீசன் களை கட்டி வருவதால், இந்திய பொருளாதாரம் ஏற்றம் கண்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை கால கொண்டாட்டங்கள் களையிழந்தன.
தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே இதற்கு காரணம். சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஒருபக்கம் பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பு ஒரு பக்கம் என பண்டிகை கால கொண்டாட்டங்களில் தாக்கம் ஏற்பட்டது.

கடை வீதிகளில் கூட்டம்
தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவிட்டதால் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முழு உற்சாகத்துடன் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், தீபாவளியை முன்னிட்டு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். கடை வீதிகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுகிறது.

27 சதவீதம் அதிகரிப்பு
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களிலும் விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 27 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அமேசான் மற்றும் பிலிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தீபாவளி பண்டிகைக்கு நுகர்வோர்கள் வாங்கும் சதவிகிதம் பன்மடங்கு அதிகரித்து இருப்பது இந்தியா பொருளாதாரத்தையும் ஏற்றம் காண செய்வதாக அமைந்துள்ளது.

விற்பனை அதிகரிப்பு
நவராத்ரி மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் புதிய வாகனங்களின் விற்பனை 57 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், ஊரக பகுதிகளில் இருசக்கர வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கையும் 2019- ஆம் ஆண்டின் அளவோடு ஒப்பிடுகையில் 3.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல், கார்கள் மற்றும் எஸ்.யூ.வி ரக வாகன விற்பனை எண்ணிக்கையும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 92 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

வேலையின்மை விகிதமும் குறைந்துள்ளது
தேவை அதிகரிப்பால் தொழில்துறையும் தங்கள் திறனை அதிகரித்துள்ளன. பருவமழை நன்றாக பெய்தது, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு ஆகியவற்றால் விவசாயத்துறை மற்றும் சேவைத்துறைகளில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்துள்ளது. அதேபோல், வேலையின்மை விகிதமும் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் குறைந்துள்ளது.

மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக
பொருளாதாரம் மீட்சி அடைந்து வருமானத்தை இயல்பான அளவுக்கு கொண்டு வந்திருப்பதால், இந்திய நுகர்வோர்களின் செலவினங்களும் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் ஆய்வு கூறியுள்ளது. மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக பண்டிகை காலங்களில் தேவை அதிகரித்து இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே சரக்கு மற்றும் சேவைத்துறையில் மக்கள் செலவு செய்வது அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications