'முதல் பெஞ்ச் ஸ்டூடண்ட் நான்’.. பள்ளிக்கூடத்தில் புகுந்து கலாட்டா பண்ணிய குரங்கு.. பரவும் வீடியோ!
டெல்லி: பள்ளியில் மாணவ-மாணவிகள் பாடம் கவனித்துக்கொண்டு இருக்கும் போது குரங்கு ஒன்று முதல் பெஞ்சில் ஏறி அமர்ந்துகொண்டு பாடத்தை கவனிப்பது போல் பாவனை செய்யும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அழகான செல்ல சேட்டைகளால் அடிக்கடி நம் மனதை கவருபவை விலங்குகள் என்று சொல்லலாம்.. நமது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் முதல் வன விலங்கள் வரை விலங்குகளின் செயல்களை பார்த்து ரசிக்காதவரே இல்லை எனலாம்.
பலரும் வீட்டில் ஓய்வு நேரங்களில் டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்களில் வனவிலங்களின் செயல்களை ரசித்து பார்ப்பது உண்டு...

குரங்குகளின் சேட்டைகள்
எந்த ஒரு டென்ஷனில் இருந்தாலும் விலங்குகளின் ரசிக்கும் படியான நடத்தைகள் நமது மனைதை இலகுவாக்கிவிடும். அதிலும் குரங்குகளின் சேட்டைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. செவனே என படுத்திருக்கும் சிங்கம் ஒன்றை அதற்கு தெரியாமல் வாலை பிடித்து இழுத்து இழுத்து அதை கோபப்படுத்தி பார்க்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பார்க்காதவர்களே இல்லை என்றும் சொல்லலாம். பழைய வீடியோ என்றாலும் அதை இன்று பார்த்தாலும் ரசிக்கும்படியாக இருக்கும்.

செல்பிக்கு போஸ் கொடுக்கும் குரங்குகள்
மனிதன் செய்வதை அப்படியே பிரதிபலித்து செய்து காட்டும் குரங்குகளின் சேட்டைகள் அவ்வப்போது இணையத்திலும் பரவி வைரல் ஹிட் அடிக்கும். இது போன்ற வீடியோக்களை கண்டு ரசிக்க நேரம் போதாது. தலையில் பேன் பார்க்கும் காலம் எல்லாம் இப்போது மலையேறி, செல்பிக்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு குரங்குகளும் காலத்திற்கு ஏற்ப மாறிவிட்டன. இப்படி குரங்குகள் பன்னும் செல்ல சேட்டைகள் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆகிவிடுகின்றன

பாடம் கவனிக்கும் குரங்கு
இப்படித்தான் ஜார்க்கண்டில் உள்ள அரசுப்பள்ளி வகுப்பறையில் மாணவர்களோடு மாணவர்களாக முதல் பெஞ்சில் குரங்கு ஒன்று அமர்ந்து பாடம் கவனிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேற லெவல் ஹிட் அடித்துக்கொண்டு இருக்கிறது. ட்விட்டரில் தீபக் மஹடோ என்பவர் இந்த வீடியோவை கடந்த வியாழக்கிழமை பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோ வெளியானது முதல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

முதல் பெஞ்ச் மாணவர் போல்...
இந்த வீடியோவில், மாணவ மாணவிகள் பாடம் கவனித்துக்கொண்டு இருக்கும் போது முதல் பெஞ்சில் ஏறி அமர்ந்து இருக்கும் குரங்கு ஒன்று தானும் பாடத்தை கவனிப்பது போல் பாவனை செய்கிறது. செம ஸ்டைலாக குரங்கு அமர்ந்து இருக்கும் இந்த பதிவு பார்ப்பவர்களை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த பதிவுக்கு கீழே ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர். ஜார்க்கண்டில் உள்ள ஹசரிபாக் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் தான் குரங்கு வகுப்பறைக்குள் புகுந்து இந்த சுவாரசிய நிகழ்வை நடத்தியதாக பதிவை வெளியிட்டவர் தெரிவித்துள்ளர். ஆனால் இது எப்போது நடைபெற்றது என்ற விவரம் இல்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications