• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் பின்னணியில் நாட்டை பிளவுபடுத்தும் சதி.. டெல்லி பிரச்சாரத்தில் மோடி பகீர்

|
  செய்தி தெரியுமா | 30-01-2020 | oneindia tamil

  டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆளும், ஆம் ஆத்மி இடையே கடுமையான மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

  ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அமித் ஷா, ஜே.பி.நட்டா போன்ற மூத்த பாஜக தலைவர்கள் பிரச்சார களம் வந்த நிலையில், பிரதமர் மோடி மட்டும் இதுவரை பிரச்சாரம் செய்யாமல் இருந்தார்.

  First time BJP government achieved many path breaking schemes: Narendra Modi

  இந்த நிலையில்தான், டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு டெல்லியில் பிப்ரவரி 3ம் தேதியும், துவாரகா பகுதியில் 4ம் தேதியும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் என அக்கட்சி தெரிவித்தது.

  அதன்படி, டெல்லியில் இன்று, மாலை, கார்கர்டோமா பகுதியில் உள்ள சிபிடி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் மோடி பங்கேற்று பேசினார். அவர் கூறியதை பாருங்கள்:

  காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சட்டப் பிரிவு 370, 70 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது, அயோத்தி தீர்ப்பு 70 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது, பாகிஸ்தானுக்கான கர்தார்பூர் வழித்தடம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது, இந்தியா-வங்கதேசம் எல்லைப் பிரச்சினை 70 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கப்பட்டது, குடியுரிமை சட்டத் திருத்தம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது, போர் நினைவுச்சின்னம் 50-60 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. இவை அனைத்தும் எங்கள் ஆட்சியில் வந்தவை.

  நாட்டு மக்களுக்கு லோக்பால் கிடைத்தது, ஆனால் டெல்லி மக்கள் இன்னும் லோக்பாலுக்காக காத்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய இயக்கம் இங்கு இருந்தது, எத்தனையோ பிரச்சாரங்கள் நடந்தன, அவர்கள் அனைவருக்கும் இப்போது என்ன ஆனது?

  பட்ஜெட் 2020 இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல, இந்த முழு தசாப்தத்தையும் வழிநடத்தப் போகிறது. இந்த பட்ஜெட்டின் நன்மை டெல்லியின் இளைஞர்கள், டெல்லியின் வர்த்தகர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு கிடைக்கும்.

  டெல்லி தேர்தல் களம் வந்த மோடி.. மத்திய அரசு தீர்த்து வைத்த பிரச்சினைகளை லிஸ்ட் போட்டு பிரச்சாரம்

  பாஜக தலைமையிலான மத்திய அரசு 2022க்குள் அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் 'பக்கா' வீடுகளை வழங்கும்.

  குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த பல நாட்களாக சீலாம்பூர், ஜாமியா மற்றும் ஷாஹீன் பாக் ஆகிய இடங்களில் நடந்து வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. இவை முன்னோட்டம். இந்த ஆர்ப்பாட்டங்கள் இந்தியாவைப் பிளவுபடுத்தும் சதி. அதன் பின்னால் அரசியல் உள்ளது. இது இந்த நாட்டின் நல்லிணக்கத்தை அழிக்கப்போகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

   
   
   
  English summary
  Article 370 was abrogated after 70 yrs, Ayodhya verdict came after 70 yrs, Kartarpur corridor was made after 70 yrs, India-Bangladesh border issue solved after 70 yrs, CAA came after 70 yrs, War memorial and Police memorial made after 50-60 years, says PM Modi at Delhi.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X