இலவசங்கள் தொடர்ந்தால் இலங்கை நிலைதான் நமக்கும்! பிரதமரிடம் நேரடியாக முறையிட்ட செயலர்கள்! பரபர தகவல்
டெல்லி: தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் ஜனரஞ்சக மற்றும் இலவசத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

வழக்கமாகத் தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகளும் பல வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்யும். தேர்தலில் மக்கள் வாக்குகளைப் பெற பல்வேறு கட்சிகளும் இலவசத் திட்டங்கள் அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த இலவச திட்டங்கள் குறித்து இரு வேறான கருத்துகள் உள்ளன. தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்கள் குறித்து நீதிமன்றங்களில் கூட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

முக்கிய சந்திப்பு
இந்தச் சூழலில் ஜனரஞ்சக மற்றும் இலவசத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை பல்வேறு துறைகளின் செயலாளர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இலங்கை நிலை
குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் இலவச திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. இலவசத் திட்டங்களின் போக்கைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால், சில மாநிலங்களில் இலங்கை நாட்டில் ஏற்பட்டது போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சில செயலாளர்கள் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பொருளாதார ரீதியாக அதிக காலம் நீடிக்க முடியாதவையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்போதோ திவால்
அரசியல் தேவைகள் காரணமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டங்களின் பொருளாதார சமநிலையை செக் செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினர். நாட்டின் பல மாநிலங்களில் ஆபத்தான நிதிநிலையில் இருப்பதாகவும், அவை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்காவிட்டால் எப்போதே திவால் ஆகியிருக்கும் என்றும் செயலாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாகப் பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் வெளியிட்ட அறிவிப்புகள் நீடிக்க முடியாதவை என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

இலவச மின்சாரம்
இது குறித்து உடனடியாக தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படும் இலவச மின்சாரம் என்பது அரசுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய திட்டங்களுக்கு அரசால் அதிக நிதி ஒதுக்க முடிவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் பாதிப்பு
சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதிய முறைக்கு மாறியுள்ளது பொருளாதார ரீதியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று குறித்து மத்திய அரசு அதிகாரிகளும் கவலைப்படுகிறார்கள். இருப்பினும் இது தொடர்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இலவசத் திட்டங்கள் குறித்த அரசியல் கட்சிகளின் அறிவிப்புகள் நீண்ட கால நோக்கில் மத்திய-மாநில அரசில் கடுமையான நிதி பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பிரதமர் மோடி
மத்திய மாநில அரசுகளுடன் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், வறுமையை ஒழிக்கச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மூத்த செயலாளர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும்,அனைத்து பிரச்சினைகளிலும் தேசியக் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்பதால், ஒரு குழுவாகச் செயல்படவும் பிரதமர் மோடி செயலர்களைக் கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், இதுபோல செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவது இது ஒன்பதாவது முறையாகும்.

மாநில வரி வருவாய்
வரிவருவாயை பொருத்தவரை இப்போது மாநில அரசுகள் பெரும்பாலும் மத்திய அரசை நம்பியே இருக்க வேண்டிய சூழலில் உள்ளன. சொத்து வரி மற்றும் மோட்டார் வாகனப் பதிவிலிருந்து பெறப்படும் வரிகள், மது மீதான கலால் மற்றும் பெட்ரோல் மீதான VAT என மாநில அரசின் நேரடி வரி வசூல் இப்போது குறைந்துள்ளன. இதனால் மாநில அரசுகளின் வருவாய் பெரியளவில் அதிகரிப்பதில்லை. அதிலும் கூட மத்திய அரசு தங்களுக்கு வரும் நிதியை முறையாக வழங்குவதில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிலுவைத் தொகை முறையாக விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications