டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுதந்திரம்! வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பு அதிகார பகுதிகள் குறைப்பு! நாளை அமல்! அமித்ஷா அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, அசாம், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை நாளை முதல் படிப்படியாக குறைக்கப்படுகிறது என அமித்ஷா கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களில் சதிச்செயல்களை அரங்கேற்கும் நபர்கள், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்களை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் உள்ளது. இவர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகலாந்து, மணிப்பூர், அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படைக்கான சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Budget 2022: வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு புதிய திட்டம், பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு Budget 2022: வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு புதிய திட்டம், பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

எதற்காக இந்த சட்டம்

எதற்காக இந்த சட்டம்

இதன்மூலம் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்துவோரை பாதுகாப்பு படையினர் எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்யலாம். 'வாரண்ட்' இன்றி கைது செய்யலாம். இதுமட்டுமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தவும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் உள்ளது. இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ஜம்மு காஷ்மீரிலும் நடைமுறையில் உள்ளது.

 எதிர்ப்பு ஏன்

எதிர்ப்பு ஏன்

இந்நிலையில் தான் 2021 டிசம்பர் மாதம் 4ல் நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்று நினைத்து சுரங்க தொழிலாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 13 அப்பாவிகள் இறந்தனர். இதனால் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தது. சமீபத்தில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த தேர்தலிலும் பாஜக முதல்வர் பீரன்சிங்கும் சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

நாளை முதல்... அமித்ஷா அறிவிப்பு

நாளை முதல்... அமித்ஷா அறிவிப்பு

இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தெரிவித்தார். முதற்கட்டமாக நாகலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலங்களில் நாளை முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வருகிறது. அதன்பிறகு படிப்படியாக மீதமுள்ள பகுதிகளில் அமலாகும். இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தெரிவித்தார். முதற்கட்டமாக நாகலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலங்களில் நாளை முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வருகிறது. அதன்பிறகு படிப்படியாக மீதமுள்ள பகுதிகளில் இந்த சட்டம் ரத்து செய்யப்பட உள்ளது.

எந்தெந்த பகுதிகள்

எந்தெந்த பகுதிகள்

அதன்படி முதற்கட்டமாக ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள நாகலாந்தில் 7 மாவட்டங்களில் உள்ள 15 போலீஸ் நிலைய எல்லை பகுதிகள், மணிப்பூர் மாநிலத்தில் 6 மாவட்டங்களில் 15 போலீஸ் எல்லை பகுதிகளில் குறைக்கப்படுகிறது. இதேபோல் அசாம் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் முழுவதுமாகவும், ஒரு மாவட்டத்தில் பாதியளவிலும் குறைக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதன்படி முதற்கட்டமாக நாகலாந்தில் 7 மாவட்டங்களில் உள்ள 15 போலீஸ் நிலைய எல்லை பகுதிகள், மணிப்பூர் மாநிலத்தில் 6 மாவட்டங்களில் 15 போலீஸ் எல்லை பகுதிகளிலும் இந்த சிறப்பு அதிகார சட்டம் ரத்தாக உள்ளது. மேலும் அசாம் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் முழுவதுமாகவும், ஒரு மாவட்டத்தில் பாதியளவிலும் இந்த சட்டம் ரத்தாக உள்ளது. இந்த அறிவிப்பை வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

English summary
From Tomorrow Areas under AFSPA in Assam, Nagaland, Manipur reduced, says Union Minister Amit Shah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X