Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசுர வளர்ச்சி! வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் கெளதம் அதானி! உலக அளவில் இத்தனையாவது இடமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இந்திய தொழிலதிபரான கெளதம் அதானியின் அசுர வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி அவர் உலக பணக்காரரான வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி 5வது இடத்தை பெற்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது கோடீஸ்வர தொழில் அதிபரான கௌதம் அதானி, அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார். இந்தியா மட்டுமல்லாது பன்னாட்டுத் தொழிலதிபதிரான இவர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் பிறந்தவர்.

அவர் இந்தியாவில் ஆறு பொது வர்த்தக நிறுவனங்களுடன் ஒரு துறைமுகம் மற்றும் எரிசக்தி நிறுவனத்தையும் நிர்வகித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி அடுத்த இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.

வாரன் பஃபெட்டை மிஞ்சினார்

வாரன் பஃபெட்டை மிஞ்சினார்

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கெளதம் அதானி உலக அளவில் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி 5வது இடத்தை பெற்றுள்ளதாக ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது. போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலான டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான பட்டியலை கடந்த ஆண்டு வெளியிட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி கெளதம் அதானி அசுர வளர்ச்சியை தொடர்ந்து பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

சொத்து மதிப்பு உயர்வு

சொத்து மதிப்பு உயர்வு

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஊடகம், விமான நிலையங்கள் மற்றும் பலவற்றில் அதானி தீவிரமான விரிவாக்கத்திற்கு வழிவகுத்துள்ள நிலையில், அவரது ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குகளும் இந்த ஆண்டு 19% முதல் 195% வரை உயர்ந்துள்ளன. இந்த மாத தொடக்கத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசரின் சகோதரரால் நடத்தப்படும் அபுதாபியின் இன்டர்நேஷனல் ஹோல்டிங் கோ அதானியின் மூன்று பசுமை ஆற்றல் சார்ந்த நிறுவனங்களில் $2 பில்லியன் முதலீடு செய்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் $70 பில்லியன் வரை முதலீடு செய்யும் இலக்குடன் இந்த நடவடிக்கை தொடங்கிய நிலையில் இது அவரது சொத்து மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

உலக அளவில் 5வது இடம்

உலக அளவில் 5வது இடம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 8.9 பில்லியன் டாலர்களாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு 2021 ஆம் ஆண்டு மார்ச்சில் 50.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது . மார்ச் 2022ஆன் ஆண்டில் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து 90 பில்லியன் டாலர்களாக உயர்ந்ததுள்ளது. கெளதம் அதானியின் 123.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அவரை இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக ஆக்கியுள்ள நிலையில், நாட்டின் நம்பர் 2 பணக்காரரான முகேஷ் அம்பானியை விட 19 பில்லியன் டாலர் அதிக சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். குறிப்பாக வாரன் பஃப்பெட்டை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் முதலிடம்

எலான் மஸ்க் முதலிடம்

ஃபோர்ப்ஸின் பில்லியனர் பட்டியலில் தற்போதைய கணிப்பின் படி, கெளதம் அதானியை விட இப்போதுஉலக அளவில் நான்கு பேர் மட்டுமே அவரை விட பெரும் பணக்காரர்களாக உள்ளனர். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க் ($269.7 பில்லியன்), அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ($170.2 பில்லியன்) , பிரெஞ்சு ஆடம்பரப் பொருட்களின் மன்னர் பெர்னார்ட் அர்னால்ட் ($167.9 பில்லியன்), மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (மதிப்பீடு $130.2 பில்லியன்) ஆகியோர் தற்போது முன்னணியில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+