டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வலிமை இழந்துவிட்டோம்.. முதல்முறையாக இந்தியாவில் பொருளாதார மந்தநிலை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

Google Oneindia Tamil News

டெல்லி: முதல்முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்து உள்ளது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இந்தியாவின் ஜிடிபி 8.6% சரிய வாய்ப்புள்ளது என்று ஆர்பிஐ கணித்துள்ளது . கடந்த காலாண்டின் சரிவு 23.9% ஆக உள்ள நிலையில்.. இந்த காலாண்டில் இது மேலும் சரிய உள்ளது என்று ஆர்பிஐ கணித்துள்ளது .

GDP: India has entered recession for first time under Modi says Rahul Gandhi

ஜூலை - செப்டம்பர் காலாண்டின் சரிவு குறித்து இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்பிஐ அமைப்பின் துணை ஆளுநர் மைக்கல் பத்ரா அடங்கிய குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முதல் முறையாக டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதார மந்தநிலையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள டிவிட்டில்.. இந்தியா முதல்முறையாக பெரிய பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது.

"டெக்னிக்கல் ரிசஷன்''.. இந்தியா பெரிய பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்துவிட்டது.. ஆர்பிஐ எச்சரிக்கை!

வரலாற்றில் முதல் முறை இப்படி நடக்கிறது. பிரதமர் மோடியின் செயலால்... இந்தியா பலம் இழந்து வலிமையற்ற நாடாக மாறி வருகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஒரு நாட்டில் அடுத்தடுத்து இரண்டு காலாண்டு ஜிடிபி மோசமான சரிவை சந்தித்தால் அது டெக்னிக்கல் ரிஷசன் என்று அழைக்கப்படும். இந்தியா.. இப்படிப்பட்ட டெக்னிக்கல் ரிஷசனுக்குள் நுழைந்துவிட்டது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

English summary
GDP: India has entered recession for first time under PM Modi says Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X