டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சோஷியல் மீடியாவிலிருந்து வெளியேற யோசிக்கிறேன்.. மோடி ட்வீட்.. ராகுல் காந்தி கொடுத்த பதிலை பாருங்க

Google Oneindia Tamil News

டெல்லி: சமூகவலைத்தள அக்கவுண்டில் இருந்து வெளியேற யோசித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு, காங்கிரஸ் சீனியர் தலைவர், ராகுல் காந்தி பதிலடி தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற அனைத்து வகையான சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேறுவதற்கு இந்த ஞாயிற்றுக்கிழமை யோசித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு ட்வீட்டர் பதிவு வெளியிட்டிருந்தார்.

Give up hatred, not social media accounts: Rahul Gandhi

சமூக வலைதளங்களில், அதிகமான பாலோவர்களை வைத்துள்ள மோடி, இப்படி ஒரு ட்வீட்டை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில் ஒவ்வொரு பிரமுகர்களும் ஒவ்வொரு வகையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "வெறுப்பை கைவிடுங்கள் சோசியல் மீடியா கணக்குகளை அல்ல" என்று பஞ்ச் அடித்துள்ளார். இந்த ட்வீட் நெட்டிசன்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே #NoSir என்ற பெயரில் ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட்டாகிவருகிறது. மோடி ஆதரவாளர்கள், அதில் ட்வீட் செய்து, சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேற கூடாது என வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

English summary
Give up hatred, not social media accounts, says Congress leader Rahul Gandhi after Modi tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X