டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம்.. வந்தது புது ரூல்ஸ்.. வீட்டிலுள்ள உங்கள் பழைய நகை நிலை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: தங்கம், தங்க நகைகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் அனைத்திற்கும் இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிமேல், 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மதிப்புகளில் மட்டும் தான் தங்கம் விற்பனை செய்ய முடியும்.

Recommended Video

    தங்க நகைகளுக்கு Hallmark கட்டாயம்..முழு விபரம் | Oneindia Tamil

    2021ம் ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கு, ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படும் என்று அரசு 2019ம் ஆண்டு நவம்பரில் அறிவித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு

    ஜூன் 1ம் தேதி முதல் ஹால்மார்க் கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு பிறகு, பிறப்பித்து இருந்தது. ஆனால் பிறகு காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இன்று முதல் ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.

    இனிமேல் கட்டாயம்

    இனிமேல் கட்டாயம்

    தற்போது ஹால்மார்க் நகைகள் பல நகைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டாலும் அனைத்து நகைகளையும், அதேபோன்றுதான் விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை இல்லை. விருப்பப்பட்டவர்கள் ஹால்மார்க் நகைகளை வாங்கும் நடைமுறைதான் இப்போது இருக்கிறது. இனிமேல் அப்படி இருக்க முடியாது.

     5 மடங்கு அபராதம்

    5 மடங்கு அபராதம்

    14, 18 அல்லது 22 கேரட் தங்க நகைகளை விற்பனை செய்யும் எந்த ஒரு விற்பனையாளராவது இனிமேல் பிஐஎஸ் ஹால் மார்க் இல்லாமல் விற்பனை செய்தால் நகையின் மதிப்பை விட 5 மடங்கு அவருக்கு அபராதம் விதிக்கப்படும், அல்லது ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது.

    பதிவு செய்யலாம்

    பதிவு செய்யலாம்

    ஏற்கனவே பல முன்னணி நகைக்கடைகளில் பிஐஎஸ் ஹால்மார்க் நகைகள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் நாடு முழுக்க இதுவரை 40 சதவீத ஜூவல்லரிகளில்தான் ஹால்மார்க் நகைகள் கிடைக்கிறது. இனிமேல் சிறு கடைகளாக இருந்தாலும் அப்படித்தான் விற்பனை செய்தாக வேண்டும். நாடு முழுக்க தற்போது 892 ஹால்மார்க் மதிப்பீடு வழங்கும் மையங்கள் உள்ளன. சுமார் 36 ஆயிரம் நகைக் கடைகள் இதில் பதிவு செய்துள்ளன. இது தொடர்பான பதிவு ஆன்லைன் மூலமாக செய்யப்படுகிறது.

    2 கிராமுக்கு கீழே கிடையாது

    2 கிராமுக்கு கீழே கிடையாது

    கட்டாய ஹால்மார்க்கிங் உத்தரவிலிருந்து தங்க பார்கள் மற்றும் தங்க நாணயங்கள் போன்ற புல்லியன் தங்கத்திற்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளன. இரண்டு கிராமுக்கு கீழே எடையுள்ள தங்க நகைகளுக்கும் இதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவற்றுக்கு ஹால்மார்க் அவசியமில்லை.

     விலை கூடும்

    விலை கூடும்

    பிஐஎஸ் வலைத்தளத்தின்படி, ஹால்மார்க்கிங்கிற்கு செலவு ரூ .35 (சேவை வரி மற்றும் பிற வரிகளைத் தவிர). இந்த கூடுதல் செலவீனத்தை நகை வாங்குவோர்தான் செலுத்த வேண்டியிருக்கும். எனவே நகைகளின் விலை ஓரளவுக்கு உயரும்.

    வேறு கேரட் தங்கங்களுக்கு பொருந்தாது

    வேறு கேரட் தங்கங்களுக்கு பொருந்தாது

    23 காரட் தங்க நகைகள் அல்லது வேறு வகையில் தங்கம் வாங்க விரும்பினால் என்ன செய்வது? என்ற கேள்வி வரலாம். "ஒரு நுகர்வோர் பழைய நகைகள் அல்லது நாணயத்தை மாற்ற அனுமதிக்கப்படுகிறார். 14, 18 மற்றும் 22 காரட் நகைகளை விற்பனை செய்வதற்கு மட்டுமே ஹால்மார்க் கட்டாயம் "என்று இந்தியன் புல்லியன் & ஜூவல்லர்ஸ் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகிறார். "நீங்கள் பிற வகை தங்கத்தை வாங்கலாம், அல்லது, 14, 18 மற்றும் 22 காரட் தவிர உங்கள் விருப்பப்படி நகைகளை தயாரிக்கலாம். அவற்றுக்கு ஹால்மார்க்கிங் அவசியமில்லை." என்கிறார் மேத்தா.

     பழைய நகைகள்

    பழைய நகைகள்

    இப்போது ஒரு கேள்வி எழலாம். ஏற்கனவே நாம் வாங்கி வைத்துள்ள நகைகளில் ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளாக இருந்தால், அவை மதிப்பு இல்லாமல் போய்விடுமா, என்பதுதான் அந்த கேள்வி. ஆனால் அப்படி எதுவும் கிடையாது. வீட்டில் இருக்கக்கூடிய தங்க நகைகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. நகைக் கடைக்காரர்கள் ஹால்மார்க் தரத்தோடு தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும். தரம் குறைவாக இருக்க கூடாது என்பதுதான், இந்த விதிமுறையின் நோக்கம். எனவே, எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அதை விற்பனை செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    விற்பனை செய்யலாமா

    விற்பனை செய்யலாமா

    நண்பர் அல்லது உறவினருக்கு ஹால்மார்க் முத்திரை இல்லாத உங்களது தங்க நகைகளை பரிசாக அல்லது விற்பனை செய்தால் செல்லுமா? என்ற கேள்வி எழலாம். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஹால்மார்க் இல்லாத தங்கத்தை பெறுவோருக்கு அதன் தூய்மை அளவு பற்றி குழப்பம் இருக்கும். அதுதான் பிரச்சினையே தவிர, அரசு தடுக்கப்போவது இல்லை. ஒரு சில்லறை விற்பனையாளருக்கு உங்கள் நகைகளை விற்க விரும்பினால், நகைக்கடைக்காரர் தூய்மையைக் கண்டறிந்து அதை வாங்குவார். இப்போதும் அதுதான் நடைமுறை.

    நகைக் கடன் நகைக் கடன்

    நகைக் கடன் நகைக் கடன்

    தங்க நகைக் கடன் பெற, ஹால்மார்க் இல்லாத உங்கள் தங்கத்தை ஏற்பார்களா என்ற கேள்வி எழக்கூடும். ஆம், தங்கக் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் தங்கத்தை ஒரு பிணையமாகப் பயன்படுத்துகின்றனர். தரத்தின் கூடுதல் உத்தரவாதமாக அவர்கள் ஹால்மார்க்கைப் பார்க்கிறார்கள். மற்றபடி வழக்கம்போல ஹால்மார்க் இல்லாத தங்கத்தை வைத்து நீங்கள் தேவைப்பட்டால், கடன் பெறலாம்.

    English summary
    Hallmark is mandatory for gold jewellery and other items from today June 15, as per the new guidelines jewellers across India will now be allowed to sell gold items of only 14, 18 and 22 carats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X