கோவின் தளத்தில் இருந்த இந்தியர்களின் தரவுகள்... டார்க் வெப்பில் லீக்கானதா? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: கோவின் போர்ட்டலில் இருந்து பல முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வேக்சின் பணிகள் மேற்கொள்ளக் கோவின் என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேக்சின் போட்டுக்கொள்ளும் நபர்கள் இதில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வேக்சின் சான்றிதழ்களையும் இதில் இருந்து தான் தரவிறக்கம் செய்ய முடியும். அதேபோல கொரோனா உறுதி செய்யப்படுவோரின் தகவல்கள் ஆர்டி- பிசிஆர் சோதனை முடிவுகளும் இதில் சேமிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர், மொபைல் எண், முகவரி, டெஸ்ட் முடிவு உள்ளிட்ட தரவுகளை ஹேக்கர்கள் திருடியுள்ளதாகவும் இவற்றை ஹேக்கர்கள் டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இருப்பினும் முதற்கட்ட விசாரணையில் கோவின் தளத்தில் இருந்து எவ்வித தகவல் கசிவும் ஏற்படவில்லை என்பதையே காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, "இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் டேட்டா லீக் குறித்த தகவல் தவறானது என்பது தெரிய வந்துள்ளது. ஏனென்றால் கோவின் தளத்தில் எந்தவொரு நபரின் முகவரியும் அல்லது தடுப்பூசிக்கான RT-PCR சோதனை முடிவுகளும் சேகரிக்கப்படாது.
மேலும், கோவின் போர்ட்டலில் இருந்து எந்தத் தகவலும் கசிந்துவிடவில்லை என்பதையும், மக்களின் முழுத் தரவுகளும் எங்கள் தளத்தில் பாதுகாப்பாக உள்ளது என்பதையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications