புத்தாண்டு பிறந்த 1 மணிநேரத்திலேயே டெல்லி, ஹரியானாவை அதிரவைத்த நிலநடுக்கம்- ரிக்டரில் 3.8 ஆக பதிவு
டெல்லி: 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்த 1 மணிநேரத்திலேயே டெல்லி, ஹரியானாவில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. புத்தாண்டின் முதல் நாளிலேயே டெல்லி, ஹரியானாவை அதிரவைத்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.8 ஆக பதிவாகி இருந்தது.
ஆங்கிலப் புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 2022-ம் ஆண்டு விடைபெற்று 2023-ம் ஆண்டுக்குள் உலகம் நுழைந்திருக்கிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தன.

சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதி உச்சத்தில் இருக்கின்றன. ஆனாலும் உலகம் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மூழ்கியது. இந்தியாவிலும் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
டெல்லி, ஹரியானாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிகாலை 1.19 மணிக்கு திடீரென நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த பொதுமக்கள் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போய் சமூகவலைதளங்களில் குவிந்தனர். சமூகவலைதளங்களில் நிலநடுக்கம் ஏற்படும் அளவுக்கு பதிவுகளைப் போட்டு தள்ளினர். இதனால் சமூக வலைதளங்களில் நிலநடுக்கமா? என கிண்டல் செய்யும் அளவுக்கு பதிவிட்டுக் கொண்டிருந்தனர்.
டெல்லி, ஹரியானாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 3.8 ஆக பதிவாகி இருந்தது. ஹரியானா மாநிலத்தின் ஜஹ்ஜர் நகரில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த நவம்பர் மாதமும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டிருந்தது. அது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications