பாலியல் குற்றவாளியுடன் மத்திய அமைச்சரின் போட்டோ.. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடக்கும் நேரம் லீக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்துள்ள நிலையில், சரியாக இந்த நேரம் பார்த்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் ஜெஃப்ரி எப்ஸ்டீனும் ஒன்றாக இருக்கும் போட்டோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த நேரத்தில் அந்த போட்டோவை வெளியிட்டு இந்தியா மீது அமெரிக்கா பிரஷரை போட முயல்கிறதா என்பதே இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது.

அமெரிக்கா இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்பந்தம் இதோ முடிந்துவிடும், அதோ முடிந்துவிடும் என சொன்னாலும் கூட இப்போதைக்கு அது முடிவது போல தெரியவில்லை.

Hardeep Singh Puri Jeffrey Epsten India-US Trade talks

வெளியான போட்டோ

இதற்கிடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இப்போது இந்தியா வந்திருக்கிறார். அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சி நடந்து வரும் நிலையில், ஹர்தீப் சிங் பூரி போட்டோ வெளியாகியுள்ளது. இந்த போட்டோ அமெரிக்க நீதித்துறை வசம் இருந்த நிலையில், அது இப்போது வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் நிர்வாகி சீனிவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மும்பைக்கு வந்த அதே நேரத்தில், அமெரிக்க நீதித்துறையின் எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து ஹர்தீப் சிங் பூரியின் போட்டோ வெளியாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யும் முன்பு வேறு எதாவது வீடியோ வெளியாகுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

சரமாரி கேள்வி

போட்டோ புகைப்படம் வெளியான நேரத்தையும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் தொடர்புபடுத்தி அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல சிவசேனா (தாக்கரே) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் ஹர்தீப் சிங் பூரி தொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பதிவில், "மோடிஜி, உங்கள் அமைச்சரவையில் உள்ள ஹர்தீப் பூரி, ஜெஃப்ரி எப்ஸ்டீனைத் தனியாக சந்திக்கிறாரா? அந்தச் சந்திப்பில் அவர் என்ன செய்தார்?" என்று கேள்வி எழுப்பினார்.

யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்

அமெரிக்காவில் மிகவும் மோசமான குற்றவாளிகளில் ஒருவர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் தனது தீவில் வைத்து மைனர் சிறுமிகளை பெரும் பணக்காரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் இரையாக்கியுள்ளார். இது தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கொடூரத்தில் தொடர்புடைய மற்ற தொழிலதிபர்கள் பெரும் பணக்காரர்கள் பெயர்கள் பொதுவெளிக்கு வரவே இல்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே எப்ஸ்டீன்- ஹர்தீப் சிங் பூரி தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அப்போது தனது குற்றச்சாட்டுகளை ஹர்தீப் சிங் பூரி மறுத்திருந்தார். பிரதமர் மோடிக்கும் எப்ஸ்டீன் பைல்ஸ்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஹர்தீப் சிங் பூரி

எப்ஸ்டீனை சந்தித்தது தொடர்பாக விளக்கம் அளித்த ஹர்தீப் சிங் பூரி, 9 ஆண்டுகளில் அவரை நான்கு முறை சந்தித்ததாக கூறியிருந்தார். 2009ல் நியூயார்க் சென்றதிலிருந்து 2017 வரை, சர்வதேச அமைதிக்கான நிறுவனம் தொடர்பாக அந்தச் சந்திப்புகள் நடைபெற்றதாகவும், எப்ஸ்டீனைத் தனியாகச் சந்திக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், எப்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் பாலியல் சுரண்டல், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பானவை என்றும் அவற்றுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பூரி விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், இப்போது வெளியாகியுள்ள போட்டோவில் ஹர்தீப் சிங் பூரியும் எப்ஸ்டீனும் தனியாக உள்ளனர். இதை குறிப்பிட்டே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சரியாக அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே அமெரிக்கா இந்த போட்டோவை வெளியிட்டு இருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+