டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Hathras Rape: அராஜகம்...உயிரிழந்த பெண் குடும்பத்தினர் சித்ரவதை...ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

Google Oneindia Tamil News

டெல்லி: உண்மையை மறைப்பதற்காக நீதிமன்றத்துக்கு உத்தரப் பிரதேச அரசு சென்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் அடித்து சித்ரவதை செய்துள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார்.

''ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற போலீசார் அனுமதிக்கவில்லை. அதேபோல் எங்களையும் ஹத்ராஸ் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இந்தியராக இருக்கும் யாரும் இந்த மாதிரியான அராஜக செயலை ஆதரிக்க முடியாது'' என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Hathras Victim family members are beaten up and brutalized says Rahul Gandhi

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம் பெண் ஒருவர் பலியானார். இது நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு ஹத்ராஸ் சென்றனர். ஆனால், அவர்கள் வழியிலேயே மறிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது போலீசார் ராகுல் காந்தியின் சட்டையைப் பிடித்து இழுத்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மைகளை எரித்தனர். இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

English summary
Hathras Victim family members are beaten up and brutalized says Rahul Gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X