டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புற்றீசலான கொரோனா..150 மாவட்டங்களில் முழு முடக்கம்?.. லிஸ்ட்ல சென்னை, செங்கல்பட்டு இருக்கா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் 150 மாவட்டங்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது.

Recommended Video

    தலைநகரம் முதல் மலைக்கோட்டை வரை: வருகிறது 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு…?

    இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உக்கிரமாகவே இருக்கிறது. வடஇந்தியாவில் எங்கு திரும்பினாலும் கொரோனாவால் இறந்தோரின் சடலங்கள் எரியும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன.

    இந்த நிலையில் முதல் அலையின் போது போடப்பட்டது போல் லாக்டவுன் போட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

     ஆக்சிஜன் இல்லை... கர்நாடக அரசு மருத்துவமனையில் மூச்சு திணறி.. அடுத்தடுத்து 8 நோயாளிகள் பலியான சோகம் ஆக்சிஜன் இல்லை... கர்நாடக அரசு மருத்துவமனையில் மூச்சு திணறி.. அடுத்தடுத்து 8 நோயாளிகள் பலியான சோகம்

    150 மாவட்டங்கள்

    150 மாவட்டங்கள்

    குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி, கர்நாடகா, குஜராத், ஹரியானா, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது 150 மாவட்டங்களில் கொரோனாவின் நிலை மோசமாகி வருகிறது.

    15 சதவீதம்

    15 சதவீதம்

    கடந்த இரு வாரங்களை ஒப்பிடும் போது 15 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று மத்திய சுகாதாரத் துறை உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பரிந்துரை

    பரிந்துரை

    அதாவது 15 சதவீதத்திற்கு மேல் கொரோனா உறுதியாகியுள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு அறிவிக்கும் என தெரிகிறது.

    நாள்தோறும் அதிகரிப்பு

    நாள்தோறும் அதிகரிப்பு

    கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக உள்ள மாவட்டங்களில் அதன் பரவல் சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டியது கட்டாயம் என்பதால் முழு ஊரடங்கிற்கு சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது. கடந்த சில தினங்களாக இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு

    தமிழகத்தை பொருத்தவரை தினந்தோறும் 13 ஆயிரத்திற்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். நேற்றைய தினம் இந்த எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு போடும்பட்சத்தில் அந்த லிஸ்ட்டில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகியவை இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Union Health Department gives Centre a proposal of lockdown for 150 districts in India which has high positivity rate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X