டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.. முழு விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: வரும் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    குழந்தை-யானை நட்பு..வைரலாகும் டிக்டாக் வீடியோ

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை பிறப்பித்த மத்திய அரசு ஐந்து கட்டங்களாக ஊரடங்கை நீட்டித்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 கட்ட ஊரடங்கில் நிறைய தளர்வுகளை அளித்துள்ளது.

    அந்த வகையில் வரும் 8ம் தேதி முதல் கோயில் உள்பட அனைத்து வகை மத வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க என்னென்ன நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

    என்னாது.. இனிமே, கோவில்களில் பொங்கலும், புளியோதரையும் கிடையாதா..? அரசு போட்ட புது ரூல்ஸ்! என்னாது.. இனிமே, கோவில்களில் பொங்கலும், புளியோதரையும் கிடையாதா..? அரசு போட்ட புது ரூல்ஸ்!

    வெப்பமானி அவசியம்

    வெப்பமானி அவசியம்

    • மத வழிபாட்டு தலங்களுக்குள் கொரோனா அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
    • நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும்முறை இருக்க வேண்டும்.
    • வழிபாட்டு தலங்களில் சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
    • அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அத்துடன் பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை.
    • ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
    அன்னதானம் எப்படி

    அன்னதானம் எப்படி

    • வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும்.
    • பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.
    • சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்சல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும்.
    • கழிவறைகள், கை கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும்.
    • கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும்
    காலனிகள் எப்படி

    காலனிகள் எப்படி

    • அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் வைத்துவிட்டு வர வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • வழிபாட்டு தலங்கள் முன்பு சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.
    • வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
    • வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் (வட்டம் அல்லது சதுரம்) வரைந்திருக்க வேண்டும்.
    6 அடி இடைவெளி

    6 அடி இடைவெளி

    • முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும்.
    • வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
    • வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்
    • இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
    • ஏசி பயன்படுத்துவோர் (24 30 செல்சியஸ் எனற அளவீட்டை மட்டுமே பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழையும்படி வழிவகை செய்திருத்தல் அவசியம்

    English summary
    Unlockdown SOPs: health ministry sop on preventive measures in worship
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X