ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம்- 24 மணிநேரத்தில் 65,022 பேருக்கு தொற்று
டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 65,022 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,22,76,697 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,50,23,580 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
உலக நாடுகளின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,82,975 ஆகும். கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் முதல் 2 இடங்களில் உள்ளன.

கொரோனா பாதிப்பும் மரணங்களும்
அமெரிக்காவில் மொத்தம் 5,652,475 பேரும் பிரேசிலில் 3,411,872 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,766,626 ஆகும். கொரோனா மரணங்களில் அமெரிக்கா- 1,74,933; பிரேசில் 1,10,019; இந்தியா- 53,023 ஆகும்.

ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடம்
ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் 65,022 பேருக்கு கொரோனா உறுதியானது. பிரேசிலில் 48,637 பேருக்கும் அமெரிக்காவில் 40,500 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

டிஸ்சார்ஜ், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,50,23,580. அமெரிக்காவில் 3,001,805, பிரேசிலில் 2,554,179, இந்தியாவில் 2,035,143 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 2,475,737; பிரேசிலில் 747,674; இந்தியாவில் 678,460 ஆகும்.
Recommended Video

மகாராஷ்டிரா, தமிழகம்
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகம். இம்மாநிலத்தில் மொத்தம் 6,15,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,49,654; ஆந்திராவில் 3,06,261; கர்நாடகாவில் 2,40,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவில் 20,687 பேரும் தமிழகத்தில் 6,007 பேரும் உயிரிழந்துள்ளனர்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications