டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவை ஒருங்கிணைந்த தேசமாக பல நூற்றாண்டுகளாக இணைத்திருப்பது இந்தி... அமித்ஷா ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவை ஒருங்கிணைந்த தேசமாக பல நூற்றாண்டுகளாக இணைத்திருப்பது இந்தி மொழிதான் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷா இந்தி மொழிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் வீடியோ செய்தியையும் அமித்ஷா வெளியிட்டுள்ளார்.

Hindi is Unifying Force For India, Says Amit Shah

ட்விட்டர் பதிவு, வீடியோவில் அமித்ஷா கூறியிருப்பதாவது: இந்தி என்பது இந்திய கலாசாரத்தில் இருந்து அகற்ற முடியாதது. ஒருதேசத்தை அதன் எல்லைகள், புவியியல் அடிப்படையில் அடையாளப்படுத்துகிறோம். ஆனால் ஒருதேசத்தின் மிகப் பெரும் அடையாளம் என்பதே மொழி.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் ஒற்றுமையின் பலமாக இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் கலாசார, மொழி வேறுபாடுகள் இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக இந்திதான் ஒருதேசமாக ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறது.

"கன்னடா சாக்கு.. இந்தி திவாஸ் யாக்கே?" இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் வெடித்த போராட்டம்

புதிய கல்விக் கொள்கையின் மூலமாக பிற இந்திய மொழிகளுடன் இந்தியையும் வளர்க்க வேண்டும். அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ளூர் மொழிகளுடன் இந்தியையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

English summary
Union Home Minister Amit Shah Hindi has been a unifying force for the whole nation for centuries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X