பயங்கரம்.. இந்து பெண் தலை துண்டித்து கொலை.. தோலை உரித்த கொடூரம்.. பாகிஸ்தானை விளாசிய இந்தியா
டெல்லி: பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களாக இந்துக்கள் வசித்து வரும் நிலையில் இந்து பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலையை துண்டித்த மர்மநபர்கள், தோலை உரித்து உடலை வயலில் வீசி சென்ற பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. மனதை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் இந்து, சீக்கியர், கிறிஸ்தவர்கள் மதசிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தானில் வசித்து வரும் மதசிறுபான்மையினர் மீது தொடர்ந்து பல்வேறு அடக்குமுறைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே சில கொடூர சம்பவங்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்து வருகின்றன.

கட்டாய மதமாற்றம்
குறிப்பாக இந்து கோவில்கள், சிலைகளை சேதப்படுத்துதல், இந்து, கிறிஸ்தவ, சீக்கிய பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, அவர்களை திருமணம் செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் பாகிஸ்தானில் நடந்து வருகின்றன. குறிப்பாக சிந்து மாகாணத்தில் கட்டாய மதமாற்றம், சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கணவரை இழந்த பெண்
இந்நிலையில் தான் சிந்து மகாணத்தில் தற்போது கொடூரமான முறையில் இந்து பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்ணை கொலை செய்தவர்கள் அவரது தோலை உரித்துள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விபரம் வருமாறு: பாகிஸ்தானின் சிந்து மகாணத்தில் உள்ள சிஞ்சோரா பகுதியில் வசித்து வந்தவர் தாயா பீல் (வயது 40). இவர் கணவரை இழந்த நிலையில் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் தான் வீட்டில் இருந்து தயாபீல் மாயமானார். அவரது அக்கம்பக்கத்தினர் தேடிப்பார்த்தனர்

தலை துண்டிப்பு- தோல் உரிப்பு
அப்போது வயல் வெளியில் தயா பீல் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை துண்டிக்கப்பட்டு இருந்தது. முகம் உள்பட உடலின் சில இடங்களில் தோல் உரிக்கப்பட்டு இருந்தது. அவரது உறுப்புகள் அறுக்கப்பட்டு இருந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர் பாலாத்காரத்துக்கு பிறகு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

உறுதி செய்த செனட்டர்
இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட்டரான கிருஷ்ண குமாரி உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டில், ‛‛தயாபீல் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தலை துண்டிக்கப்பட்டுள்ளது. உடலின் தோலை காட்டுமிராண்டிகள் உரித்துள்ளனர். சின்சோரோ மற்றும் ஷாபுர்சாகர் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்'' என தெரிவித்துள்ளார்.

கைது நடக்குமா? என கேள்வி
இந்நிலையில் தான் அரசியல்வாதிகள், சிந்து அரசு கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்களா? குற்றவாளிகளை போலீசார் கைது செய்வார்களா? இந்துக்கள் இங்கு சமமாக நடத்தப்படுவார்களா?'' என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு தற்போது இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை கண்டனம்
இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான அரிந்தம் பாக்சி கூறுகையில், ‛‛பாகிஸ்தானில் இந்து பெண் கொலை செய்யப்பட்டது பற்றிய செய்திகளை பார்த்தோம். இருப்பினும் அதுபற்றிய விபஙர்கள் எங்களிடம் இல்லை. இந்த வேளையில் பாகிஸ்தானுக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறோம். பாகிஸ்தான் தனது சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும். இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுப்பது அந்த நாட்டின் பொறுப்பாகும்'' என்றார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications