சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு.. காஷ்மீரில் சொத்து வாங்கிய பிற மாநிலத்தவர்கள் எண்ணிக்கை 34 பேர்தான்!
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
1951ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசியலமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.
இந்நிலையில் பெரும்பான்மையுடன் இரண்டாவது தடவையாக ஆட்சியில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு , காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கியது

370ஆவது சட்டப்பிரிவு நீக்கம்
ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் அப்போது ஏற்பட்ட நிலையில், மத்திய அரசின் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் அதாவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் யூனியன் பிரதேசமான மாற்றப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியன வலுவான நிலையை அடைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

370வது சட்டப்பிரிவு
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து 34 பேர் அங்கு சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசி ஃபஸ்லுர் ரஹ்மானின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஆர்டிகிள் 370 ரத்து
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீருக்கு வெளியில் இருந்து இந்த யூனியன் பிரதேசத்தில் சொத்து வாங்கியவர்களின் எண்ணிக்கையைக் கூற உள்துறை அமைச்சர் தயாரா என்று ஹாசி கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர்"அரசு வழங்கிய தகவல்களின்படி ஜம்மு காஷ்மீரில், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு வெளியில் இருந்து 34 பேர் யூனிய பிரதேசத்தில் சொத்துக்களை வாங்கியுள்ளனர் எனவும், ஜம்மு, ரியாசி, உதம்பூர் மற்றும் கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் சொத்துக்கள் உள்ளன என்று அமைச்சர் கூறினார்.

நிலம் கொள்முதல் சட்டங்கள்
ஆகஸ்ட் 5, 2019க்கு முன்பிருந்து ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படாதபோது, முந்தைய மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து இருந்தது. இதனால் அம்மாநிலத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே அங்கு நிலம் மற்றும் சொத்துக்களை வாங்க முடிந்தது. இந்நிலையில் மத்திய அரசு 2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதையடுத்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து உத்தரவிட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான சட்டங்களையும் மத்திய அரசு மாற்றி, புதிய நிலம் கொள்முதல் சட்டங்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications