டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Explained: கன்றுக்குட்டியின் சீரம் மூலம்.. கோவாக்சின் தடுப்பூசி எப்படி தயாரிக்கப்படுகிறது? -பின்னணி!

Google Oneindia Tamil News

டெல்லி: கோவாக்சின் தயாரிப்பில் கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த சீரம் எப்படி பயன்படுத்தப்படும், அதன் மூலம் எப்படி வேக்சின் உருவாக்கப்படும் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் இருப்பதாக வைக்கப்பட்ட புகார்களுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வேக்சினை உருவாக்கிய பாரத் பயோடெக் நிறுவனமும் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளது.

    ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

    கோவாக்சினை தயாரிப்பதற்கு மட்டுமே கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படும், மாறாக வேக்சினில் இந்த சீரம் இடம்பெறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வேக்சினை தயாரிக்க ஏன் கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுகிறது? கன்றுக்குட்டியின் சீரத்தை வைத்து எப்படி வேக்சினை உருவாக்குவார்கள் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    வேக்சின்

    வேக்சின்

    கொரோனா வேக்சின் தயாரிக்க, கொரோனா வைரசை சோதனை கூடத்தில் வளர்த்து பின் அதை மட்டுப்படுத்தி அல்லது கொன்று வேக்சினாக உருமாற்றி உடலில் செலுத்த வேண்டும். இந்த மட்டுப்படுத்தப்பட்ட வைரஸ் உடலில் செலுத்தப்பட்ட பின், உடலில் இருக்கும் இருக்கும் எதிர்ப்பு சக்தி அதை தாக்கி அழிக்கும். அதோடு அந்த கொரோனா வைரசை அழித்தது எப்படி என்றும் உடலில் உள்ள ஆண்டிபாடி நினைவில் வைத்துக் கொள்ளும். உண்மையில் கொரோனா வைரஸ் நம்மை தாக்கும் போது, உடலில் எதிர்ப்பு திறன் கொண்ட ஆண்டிபாடி இந்த வைரசை தாக்கி அழிக்கும்.

    தாக்கும்

    தாக்கும்

    இந்த வேக்சினை தயாரிக்க, சோதனை கூடத்தில் கொரோனா வைரஸை வளர்க்க வேண்டும். இந்த வைரஸை வளர்க்க, அதற்கு ஏற்ற புரதங்கள், சத்துக்கள், சூழ்நிலைகள் இருக்க வேண்டும். மனித உடலில் எப்படி கொரோனா வைரஸ் வளர்ந்து, பல்கி பெருகுகிறது, அதேபோன்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இதற்காகவே விலங்குகளின் சீரம் பயன்படுத்தப்படுகிறது.

    சீரம்

    சீரம்

    புரதங்கள், சத்துக்கள் நிறைந்த விலங்குகளின் சீரமை எடுத்து, அதில் கொரோனாவை செலுத்தி வளர வைப்பார்கள். இந்த சீரமை கொரோனா வைரஸ், கொன்று வளர்ந்து பெருக்கம் அடையும். கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள், சீரமில் இருக்கும் செல்களை கொன்றுதான் வளர்ச்சி அடையும். இவை வெரோ செல்கள் என்ற அழைக்கப்படும் செல் ( vero cell ). இந்த செல் வகைகளை உருவாக்க மட்டுமே விலங்குகளின் சீரம் பயன்படுத்தப்படுகிறது.

    விலங்குகள்

    விலங்குகள்

    விலங்குகள் சீரத்தின் உதவியுடன் இந்த வெரோ செல்கள் உருவாக்கப்பட்டு, அதில் கொரோனா வைரஸ் வளர்க்கப்படும். பின்னர் வெரோ செல்களை கொரோனா வைரஸ் கொன்று முழுமையாக வளர்ச்சி அடையும். பின்னர் அந்த கொரோனா வைரசை மட்டுப்படுத்தி கொரோனா வேக்சின் உருவாக்கப்படும். இங்கு கோவாக்சினை எடுத்துக்கொண்டால், அதன் தயாரிப்பதில், கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

     கன்றுக்குட்டி சீரம்

    கன்றுக்குட்டி சீரம்

    கன்றுக்குட்டி சீரம் என்பது பொதுவாக இளம் கன்றுக்குட்டியின் உடலில் இருந்து எடுக்கப்படும். 20 நாட்கள் மட்டுமே வயது கொண்ட கன்றுக்குட்டியின் உடலில் இருந்து எடுக்கப்படும். அந்த குட்டியின் ரத்தம் கட்டிய பகுதியை எடுத்து அதிலிருந்து நீர் போன்ற பகுதியை பிரித்து இந்த சீரம் உருவாக்கப்படும்.

    ஏன்

    ஏன்

    மனித உடலில் காணப்படுவதை போலவே பெரும்பாலான புரதங்கள் கன்று ஆடு, குதிரை, குரங்கு, ஆட்டுக்குட்டியில் இருப்பதால் இதன் சீரங்கள் வேக்சின் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. கன்றுகள் அதிக அளவில் கிடைக்கும், இது பெரிய விலங்கு என்பதால் இதிலிருந்து அதிக அளவு சீரம் எடுக்க முடியும். இதில் அதிக அளவில் சீரம் என்சைம்கள் உள்ளன.

    கன்றுக்குட்டி

    கன்றுக்குட்டி

    கன்றுக்குட்டியில் உள்ள அமினோ ஆசிட், கிலாஃக்டோஸ் மைக்ரோ ஆர்கானிசம் எல்லாம் வெரோ செல்களின் வளர்ச்சிக்கு உதவும். கன்றுக்குட்டியின் சீரத்தின் உதவியுடன் இந்த வெரோ செல்கள் உருவாக்கப்பட்டு, அதில் கொரோனா வைரஸ் வளர்க்கப்படும். பின்னர் கொரோனா முழுமையாக வளர்ந்த பின், அதில் ஒட்டி இருக்கும் கன்றுக்குட்டியின் சீரம் கெமிக்கல் கலவை கொண்டு சுத்தம் செய்து நீக்கப்படும்.

    நீக்கம்

    நீக்கம்

    பலமுறை இதே பணிகளை செய்து, மொத்தமாக அந்த செல்களில் இருந்து கன்றுக்குட்டியின் சீரம் நீக்கப்படும். இதனால் கொரோனா வைரஸ் மட்டுமே மீதம் இருக்கும். இதைதான் மட்டுப்படுத்தி வேக்சின் தயாரிப்பார்கள். கோவாக்சின் இப்படித்தான் தயாரிக்கப்பட்டது. பொதுவாக பல்வேறு வேக்சின்களை உருவாக்க இந்த சீரங்கள் பயன்படுத்தப்படுகிறது. செயற்கையான சில சீரங்கள் உருவாக்கப்பட்டு, இதே முயற்சிகள் செய்யப்பட்டாலும் விலங்குகளின் இயற்கையான சீரம் போல அவை ஆற்றல் மிக்கதாக இல்லை.

    வேக்சின் தயாரிப்பு

    வேக்சின் தயாரிப்பு

    போலியோ, இன்ப்ளூயன்சா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வேக்சின் இதே முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 100 வருடமாக பல்வேறு வேக்சின் உற்பத்தியில் பல்வேறு விலங்குகளின் சீரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் கூட பல்வேறு வேக்சின் தயாரிப்பிற்காக குதிரையின் சீரமை பயன்படுத்தி வருகிறது. முக்கியமாக கன்றுக்குட்டியின் சீரம் 50 வருடமாக வேக்சின் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    English summary
    How Cow-calf Serum or other Serum will help in creating vaccines against deadly deases?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X