2023 புத்தாண்டை இந்தியர்கள் வரவேற்பது எப்படி? சர்வே முடிவில் வெளியான ஷாக்..என்னங்க இப்படி ஆயிடுச்சு!
டெல்லி: 2022ம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்தியா முழுவதும் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் பலரும் அதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்தியாவில் புத்தாண்டை எப்படி கொண்டாட உள்ளீர்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்கள் கூறிய தகவல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி அவர்கள் என்ன கூறினார்கள்?
2022ம் ஆண்டின் கடைசி நாளில் நாம் உள்ளோம். டிசம்பர் 31ம் தேதியான இன்றுடன் 2022ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது.
இந்த புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகின்றனர். சென்னை, பெங்களூர், டெல்லி முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு களைகட்டும்.

புத்தாண்டை வரவேற்க ஆர்வம்
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்த நிலையில் தற்போது கொரோனா சார்ந்த கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும் கூட அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் நோக்கத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கூட கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் பற்றிய கேள்வி
இந்நிலையில் தான் லோக்கல் சர்க்கிள்ஸ் (Local Circles) எனும் வலைதளம் ஒரு கேள்வி கேட்டு இருந்தது. 2023 புத்தாண்டு கொண்டாடு மக்களின் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் அந்த கேள்வி அமைந்து இருந்தது. அதாவது 2023 புத்தாண்டை எப்படி கொண்டாட திட்டமிட்டு உள்ளீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும்பாலானவர்கள் பதிலளித்துள்ளனர்.

பெரும்பாலானவர்களின் பதில் என்ன?
இந்த கேள்விக்கு மொத்தம் இந்தியாவின் 312 மாவட்டங்களில் இருந்து 13,000க்கும் அதிகமானவர்கள் பதிலளித்து உள்ளனர். இதில் 63 சதவீதம் பேர் ஆண்கள். 37 சதவீதம் பேர் பெண்களாவர். இதில் 55 சதவீதம் பேர் அதாவது பாதிக்கு மேலானவர்கள் வீட்டில் இருந்தே தான் புத்தாண்டை வரவேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர் புத்தாண்டு கொண்டாடும் பழக்கம் இல்லை எனவும், 5 சதவீதம் பேர் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட திட்டமிடவில்லை எனவும் கூறியுள்ளனர்.

10ல் 8 பேர் வீட்டில் தான் வரவேற்பு
மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு குடும்பத்துடன் வெளியே செல்வதாக 2 சதவீதம் பேரும், நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட உள்ளதாக 2 சதவீதம் பேரும், குடும்பத்துடன் ஓட்டலுக்கு செல்ல உள்ளதாக 2 சதவீதம் பேரும், நண்பர்களின் வீட்டில் புத்தாண்டு கொண்டாட உள்ளதாக 3 சதவீதம் பேரும் கொண்டாட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சர்வேயின் அடிப்படையில் பார்த்தால் 10ல் 8 பேர் வரை வீட்டில் தான் புத்தாண்டை வரவேற்க உள்ளது தெரியவந்துள்ளது.

காரணம் என்ன?
மேலும் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தே புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளதற்கு பின்னணியில் உள்ள முக்கிய காரணம் என்ன? என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவிலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ளன. மேலும் ஜனவரியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பலரும் கூட வீட்டிலேயே புத்தாண்டை வரவேற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications