டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30,000 டிக்கெட்டுகள்.. பரிதாபமாய் ஓடி டிக்கெட் வாங்கிய இடம் பெயர்ந்தோர்..ரூ.10 கோடி பார்த்த ரயில்வே

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின்னர் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாள் முன்பதிவில் 30,000 டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.சுமார் 2 மாதம் காலம் எந்த பொதுப் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை

மே 1-ந் தேதி முதல் பிற மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் குறிப்பிட்ட அளவு பயணிகள் ரயிலும் இயங்கத் தொடங்கிவிட்டன.

நர்ஸ் அல்ல, இன்னொரு தாய்.. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் செவிலியர் தினமாக கொண்டாடப்படுவது ஏன்?நர்ஸ் அல்ல, இன்னொரு தாய்.. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் செவிலியர் தினமாக கொண்டாடப்படுவது ஏன்?

தாமதமான முன்பதிவு

தாமதமான முன்பதிவு

இதற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாலை 6 மணிக்குப் பின்னர்தான் தொடங்கியது. லாக்டவுன் அமலில் உள்ளதால் ஆன்லைன் மூலம் புக் செய்யப்பட்ட கன்பார்ம் டிக்கெட் இருந்தால்தான் ரயில் நிலையத்துக்குள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

10 நிமிடங்களில் முடிந்த முன்பதிவு

10 நிமிடங்களில் முடிந்த முன்பதிவு

முதல் 10 நிமிடங்களிலேயே ஹவுரா- டெல்லி ரயிலில் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த ரயில் இன்று மாலை 5.05 மணிக்கு புறப்படுகிறது. இதன் பின்னர் இரவு 7.30 மணியளவில் புவனேஸ்வர்-டெல்லி ரயிலுக்கான அனைத்து டிக்கெட்டுகளுமே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இவை அனைத்துமே ஏசி ரயில்கள்.

விறுவிறு முன்பதிவுகள்

விறுவிறு முன்பதிவுகள்

ஹவுரா, அகர்தலா, புவனேஸ்வரில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களிலும் இரவு 7.30 மணியளவில் முன்பதிவுகள் முடிந்துவிட்டன. மும்பையில் இருந்து டெல்லி புறப்படும் ரயிலிலும் இதேபோல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இரவு 9.15 மணி அளவில் சுமார் 54,000 பயணிகளுக்கான 30,000 டிக்கெட்டுகள் முன்பதிவாகிவிட்டன.

Recommended Video

    மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு
    முதல் நாளில் ரூ10 கோடி வருவாய்

    முதல் நாளில் ரூ10 கோடி வருவாய்

    இந்த முன்பதிவு டிக்கெட்டுகள் மே 18-ந் தேதி வரைதான் கிடைக்கும். லாக்டவுனுக்கு முந்தைய காலத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 7 லட்சம் முதல் 9 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. நேற்று முதல் நாள் முன்பதிவு மூலம் மொத்தம் ரூ10 கோடி வருவாயை ரயில்வே துறை பெற்றிருக்கிறது.

    English summary
    According to the Railway officials approximately 30,000 PNRs had been generated and reservations issued to more than 54,000 passengers on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X