டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

”எனக்கு இது நல்லா வேணும்.. அறியாமையில சொல்லிட்டேன்” - பஞ்சாங்கத்தால் பஞ்சரான மாதவன் ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: பஞ்சாங்கத்தை பார்த்து இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பியதாக கூறியதற்கு வரும் விமர்சனங்களுக்கு தான் தகுதியானவர் என நடிகர் மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் மாதவன் பொய் வழக்குகளால் சிறை தண்டனை பெற்ற இஸ்ரோவில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட "ராக்கெட்ரி - நம்பி விளைவு" என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி

பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில், பொய் வழக்குகளால் நம்பி நாராயணன் அனுபவித்த இழப்புகள் மற்றும் அதிலிருந்து தான் நிரபராதி என அவர் சட்டப்போராட்டம் நடத்தி வென்றது குறித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மாதவனின் சர்ச்சை பேச்சு

மாதவனின் சர்ச்சை பேச்சு

வரும் ஜூலை ஒன்றாம் தேதி திரைக்கும் வரும் இந்த திரைப்படம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் மாதவன் பேசினார். அப்போது அவர், "அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33 வது முறைதான் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு பஞ்சாங்கத்தின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு செவ்வாய்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியது." என்றார்.

குவிந்த மீம்ஸ்கள்

குவிந்த மீம்ஸ்கள்


மாதவனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல ஊடகங்களும் விஞ்ஞானிகளிடம் கருத்து கேட்டு செய்திகளை வெளியிட்டு இருந்தன. இந்த நிலையில் தனியார் ஆங்கில ஊடகத்தில் மாதவனை பலர் கேலி செய்வதாக வெளியான செய்தியை ட்விட்டரில் நடிகர் மாதவனே ரீட்வீட் செய்து இதற்கு தான் தகுதியானவன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மாதவன் ட்விட்டர் பதிவு

மாதவன் ட்விட்டர் பதிவு

இதுகுறித்து அவர் தனது பதிவில், "எனது அறியாமையை உணர்கிறேன். அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இதற்கெல்லாம் (விமர்சனங்களுக்கு) தகுதியானவன்தான். அதே நேரம் இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது. அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார்." என்று பதிவிட்டுள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

இதுகுறித்து பேசிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, "ஆனால், பஞ்சாங்கம் என்பது ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய ஒன்று கிடையாது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகம் செல்வது என்பது முடியாத காரியம். அது முதலில் சரியாக இருக்க வேண்டும்.

அல்மனாக்

அல்மனாக்

ஏனென்றால், அந்தந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் இடங்களை கணித்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப உலகளாவில் எங்களுக்கு என்று இருக்கக்கூடிய பஞ்சாங்கம் மாறுதல் அடைகிறது. அந்த மாறுதலுக்கு ஏற்பதான் புதிதாக உருவாக்கப்பட்ட 'அர்மனாக்' என்ற பஞ்சாங்கத்தை வைத்துதான் எந்த நேரத்திலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பயணத்தை தொடங்க வேண்டும்.

பஞ்சாங்கம் காரணமல்ல

பஞ்சாங்கம் காரணமல்ல

எவ்வளவு வேகத்தில் எப்படி சென்றால் இலக்கை அடைவோம் என்பதை தற்போது அறிவியல்பூர்வமாக கோள்கள் இருக்கக்கூடிய இடங்கள், கோள்களின் பயணங்கள், நாம் பூமியில் இருக்கக்கூடிய இடம், நாம் அனுப்பக்கூடிய பி.எஸ்.எல்.வி. எப்படி போகும், சந்திரயான் எப்படி போகும்? என அனைத்தையும் கணித்து பல ஆய்வுக்கு பிறகுதான் நேரம் கணிக்கப்படுகிறது. பஞ்சாங்கத்தை பார்த்து நேரம் குறிக்கப்படுவது கிடையாது. பஞ்சாங்கம் என்பது கோள்கள் எங்கு இருக்கிறது என்பதை சொல்கிறது. கோள்களின் நகர்வுகளை பார்த்தே நேரம் குறிக்கப்படுகிறது." என்றார்.

English summary
I deserve this for calling the Almanac the 'Panchang' in Tamil - Actor Madhavan: பஞ்சாங்கத்தை பார்த்து இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பியதாக கூறியதற்கு வரும் விமர்சனங்களுக்கு தான் தகுதியானவர் என நடிகர் மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X