"எனக்கு அது வேணும்".. சுட்டிக்குழந்தை போல் செல்போனுக்கு அடம்பிடிக்கும் குரங்குகுட்டி.. பரவும் வீடியோ
டெல்லி: சுட்டி குழந்தையை போல் 'அது எனக்கு வேணும் என்ற தொனியில்' குட்டி குரங்கு ஒன்று செல்போனுக்கு அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
Recommended Video
உலகத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் நமது அன்றாட வாழ்க்கை முறையையும் மாற்றிவிட்டன என்றே சொல்லலாம்.
குறிப்பாக செல்போன்கள் இன்றைய உலகில் மனிதனின் மூன்றாம் கை போலவே மாறிவிட்டன.

செல்போனும், குழந்தைகளும்
தற்போதெல்லாம் செல்போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. இளைஞர்கள் மட்டும் அல்லாது சுட்டிக் குழந்தைகளும் செல்போனும் கையுமாக இருப்பதை நாம் பல இடங்களில் பார்த்து இருக்கிறோம். குறிப்பாக குழந்தைகள் எப்போதாவது அழ தொடங்கினால் இன்றைய பெற்றோர் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக கைகளில் செல்போனை கொடுத்து அதில் ஏதாவது வீடியோவோ அல்லது புகைப்படத்தையோ காண்பிக்கின்றனர். நாளடைவில் இது பழக்கமாகி விடுகிறது.

செல்போன் கேட்கும் குட்டி குரங்கு
இதற்கு விலங்கினங்களும் சளைத்தப்பாடில்லை என்று கூறும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. குறிப்பாக 'குழந்தை எவ்வாறு ஒரு பொருளை பெற்றோரிடம் கேட்டு அடம்பிடிக்குமோ அதேபோல் ஒரு குரங்கு குட்டியும் செல்போன் கேட்டு அடம்பிடிக்கிறது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு குட்டி குரங்கு ஒன்று தாய் குரங்குடன் வனப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருக்கிறது.

எனக்கு இது வேணும்..
இதைப் பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர், துள்ளி விளையாடும் குட்டி குரங்கை புகைப்படம் எடுப்பதற்காக செல்போனில் படம் பிடிக்கின்றார். அப்போது இதைப்பார்த்த குட்டி குரங்கு வீடியோ எடுக்கும் நபர் வைத்திருந்த செல்போனை அருகே சென்று பிடுங்க பார்க்கிறது. மேலும் எனக்கு இது வேணும் என சுட்டிக்குழந்தையை போல் இரு கைகளாலும் செல்போனை பற்றிக்கொண்டு இழுக்க முயற்சிக்கிறது. ஆனால் இந்த குட்டி குரங்கை அதன் தாய் குரங்கு 'ஏ அது உனக்கு வேண்டாம்... இங்கே வா.. என்று சொல்லுகிற வகையில்'.. குட்டியை பிடித்து இழுக்கிறது.

நெட்டிசன்கள் கருத்து
ஆனால் மறுபடியும் அந்த குட்டி குரங்கு அது என்னது என்ற தொனியில், மீண்டும் செல்போனை இரு கைகளால் பற்றி இழுக்க முயற்சிக்கிறது. அதேபோல் மீண்டும் அந்த தாய் குரங்கும் குட்டி குரங்கை அங்கு செல்லாதே என்ற பாவனையில் பிடித்து இழுக்கிறது. பார்ப்பவர்களை ரசிக்கும் வகையில் உள்ள இந்த வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து குட்டி குரங்கு மிகவும் அழகாக உள்ளது என்றும், குட்டி குரங்கின் செயல்கள் அப்படியே சிறு குழந்தையை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications