Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃப்ளைட்ட கூட விட்டு வைக்க மாட்டீங்களா! பறக்கும் போது பீடா துப்பிய வடக்கர்! கடுப்பான ஐஏஎஸ் அதிகாரி..!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : விமானத்தில் பயணம் செய்யும்போது கூட யாரோ ஒருவர் விமானத்தில் ஏறி குட்காவையோ பீடாவையோ மென்று துப்பிய சம்பவத்தின் புகைப்படத்தை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், ஏராளமானோர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

'பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்' என்ற பாட்டை பலரும் கேட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு பேருந்து பயணமும் ரயில் பயணமும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது அலாதியானது.

குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் மாலை நேரங்களிலும் ஜன்னலோர பயணம் என்பது யாராலும் மறுக்க முடியாது. அதே சமயத்தில், சில நேரங்களில் பேருந்து பயணம் ஜன்னலோரத்தில் அமர்வது நமக்கு தொந்தரவு கூட தரலாம்.

குட்கா பயன்பாடு

குட்கா பயன்பாடு

தூங்கிக்கொண்டு மேலே விழுவது, குறட்டை விடும் முரட்டு ஆசாமி, எச்சில் துப்பும் நபர்கள், வெற்றிலைப்பாக்கு, குட்கா , பான் மசாலா என என மென்று துப்பி தான் அமர்ந்திருக்கும் இடத்தை மட்டும் அல்லாது தன்னைச் சுற்றியிருக்கும் மக்களையும் அவதிக்குள்ளாக்கும் நபர்களும் பயணத்தின்போது இருக்கிறார்கள்.

விமான பயணம்

விமான பயணம்

உள்ளூர் பேருந்தில் உள்ள உலக அளவில் பயணம் செய்யும் விமானங்களில் கூட இம்மாதிரியான நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது நடந்துள்ளது ஒரு சம்பவம். அவனிஷ் சரண் என்ற ஐஏஎஸ் அதிகாரி தான் , தான் பயணம் செய்த விமானத்தில் 'மர்ம நபர்' ஒருவர் குட்கா துப்பிய கறையை விமானத்தில் இருந்தவாறு படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குட்கா எச்சில் கறை

குட்கா எச்சில் கறை

"யாரோ தங்கள் அடையாளத்தை விட்டுவிட்டார்கள்." என்ற தலைப்பில் அவர் பகிர்ந்துள்ள நிலையில், அவரது பதிவு பல்லாயிரக்கணக்கான லைக்குகளைத் தாண்டியுள்ளது. இதை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர். "இவை அனைத்தும் அவர்களின் வளர்ப்பின் வெளிப்பாடு" என்று கூறிய அவர், "இதுபோன்ற செயலை பொறுத்துக்கொள்ளக்கூடாது, அந்த நபரை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நெட்டிசன்கள் கோபம்

நெட்டிசன்கள் கோபம்

மேலும் இந்த சம்பவத்தால் நெட்டிசன்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில், விமானத்தின் ஜன்னலில் மென்று புகையிலையை துப்பிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில ட்விட்டர் பயனர்கள் புகையிலை பொருட்களுக்கான விளம்பரங்களை ஆதரிக்கும் பிரபலங்களை வசைபாடியதோடு, வெட்கக்கேடான செயலைச் செய்த நபரின் விமானப் பயணத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+