முதலில் கோவாக்சின்,அடுத்து கோவிஷீல்டு.. மிக்ஸ் செய்து போட்டால் தடுப்பாற்றல் அதிகரிக்கிறது..ஐசிஎம்ஆர்
டெல்லி: ஒரு டோஸ் கோவாக்சின், அதன் பிறகு கோவிஷீல்டு என மிக்ஸ் செய்து போடுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, கொரோனா வேக்சின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன.
அதன் பிறகு, கடந்த மார்ச் மாதம் முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு வேக்சின் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் 18+ அனைவருக்கும் வேக்சின் போடும் பணி தொடங்கப்பட்டது.

வேக்சின் பணிகள்
வேக்சின் போடும் பணிகளுக்காக தற்போது வரை இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் தடுப்பூசி ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை பெரும்பாலும், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு வேக்சின்களை கொண்டே தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகிறது. வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட சமயத்தில், முதலில் மக்கள் தயக்கம் காட்டினாலும், அதன் பிறகு ஆர்வத்துடன் வேக்சின் போட தொடங்கிவிட்டனர்.

உத்தரப் பிரதேசம்
இருப்பினும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் மாற்றி அளிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதாவது முதல் டோஸில் கோவிஷீல்டு, இரண்டாம் டோஸில் கோவாக்சின் என மாற்றி அளிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. வேக்சின்களை இப்படி மிக்ஸ் செய்து அளிப்பதன் மூலம் தடுப்பாற்றல் அதிகரிக்குமா என்ற கேள்விகளும் எழுந்தன.

தடுப்பூசிகள்
ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் இப்படி வேக்சின்களை மிக்ஸ் செய்து அளிக்கும் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் கொரோனா தடுப்பூசிகளை மிக்ஸ் செய்து அளிப்பதன் மூலம் தடுப்பாற்றல் எந்தளவு அதிகரிக்கிறது என்பது குறித்து ஆய்வு வேலூரிலுள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி கடந்த மாதம் சோதனை செய்தது.

தடுப்பாற்றல் அதிகரிக்கிறது
இந்நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை மிக்ஸ் செய்து அளிப்பதன் மூலம் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதாவது முதல் டோஸில் ஒரு தடுப்பூசி, அடுத்த டோஸில் வேறொரு தடுப்பூசி என்று அளிப்பதன் மூலம் தடுப்பாற்றல் அதிகரிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுமார் 300 தன்னார்வலர்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு
மத்திய அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வேக்சின் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தடுப்பூசி உற்பத்தி இல்லை. இதனால் பல்வேறு இடங்களிலும் வேக்சின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தச் சூழலில் ஆய்வில் இப்படியொரு முடிவு கிடைத்துள்ளது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், வேக்சின்களை மிக்ஸ் செய்து பொதுமக்கள் மத்தியில் போட மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

உலக சுகாதார அமைப்பு
கொரோனா வேக்சின்களை இப்படி மிக்ஸ் செய்து போடுவது குறித்து உலக நாடுகள் ஆய்வு செய்யத் தொடங்கிய போது உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. அதாவது கொரோனா தடுப்பூசிகள் மிக்ஸ் செய்து போடுவது குறித்து, தனிப்பட்ட நபர்கள் முடிவு செய்யத் தொடங்கினால், நாட்டில் யாருக்கு எந்த தடுப்பூசி எப்போது அளிக்கப்பட்டது என்பதையே கண்டறிய முடியாத சூழல் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications