தடுப்பூசிக்கே போக்கு காட்டியது 'டெல்டா'தான் .. ஆனாலும் 'ஆச்சர்யமான உண்மை'.. ஐசிஎம்ஆர் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தடுப்பூசி பெற்றவர்கள் கொரோனாவின் டெல்டா வைரஸால் (86சதவீதம்) பாதிக்கப்பட்டாலும், அதில் 9.8 சதவீதம் பேர் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதேபோல் தடுப்பூசி பெற்றவர்கள் டெல்டா பிறழ்வு வைரஸால் உயிரிழப்பது 0.4 சதவிகிதம் என்கிற அளவில் தான் உள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் தடுப்பூசி பெற்றவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாவது குறித்து நாடு முழுவதும் ஐசிஎம்ஆர் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தெரிய வந்த முக்கியமான நல்ல விஷயம். தடுப்பூசி செலுத்துவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வெகுவாக குறைகிறது. இறப்புக்கான வாய்ப்பும் மிகக்குறைவாக இருப்பது தான்.

ஐசிஎம்ஆரின் ஆய்வு மாதிரிகளில் இரண்டு புதிய கொரோனா (SARS-CoV-2) வகைகளான டெல்டா AY.1 மற்றும் AY.2 ஆகியவை அடையாளம் காணப்பட்டன. இதில் டெல்டா AY.1 மற்றும் டெல்டா AY.2 ஆகியவை ஸ்பைக் புரத பிராந்தியத்தில் K417N பிறழ்வு இருப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன.

டெல்டா பிறழ்வு

டெல்டா பிறழ்வு

இந்த டெல்டா பிறழ்வு வைரஸ் தடுப்பூசிகளுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு அமைப்புகளிடம் இருந்த தப்பிக்ககூடியவையாக உள்ளன . அதாவது மரபணு மாறிய வைரஸ்கள் தடுப்பூசிகளுக்கு எதிராக உயிர் வாழக்கூடியவை "என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

677 பேரிடம் ஆய்வு

677 பேரிடம் ஆய்வு

இந்த ஆய்விற்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இரண்டு டோஸ் மற்றும் ஒரு டோஸ் தடுப்பூசிகளை (கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின்,) பெற்ற பின் நோய் பாதிப்பை சந்தித்த 677 பேரின் மருத்துவ மாதிரிகளை 17 மாநிலங்களில் சேகரித்தது. மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், உத்தரகண்ட், கர்நாடகா, மணிப்பூர், அசாம், ஜம்மு-காஷ்மீர், சண்டிகர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, புது தில்லி, தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சேகரிக்கப்பட்டது.

யாருக்கு பாதிப்பு

யாருக்கு பாதிப்பு

பகுப்பாய்வு செய்யப்பட்ட 677 நோயாளிகளில், 85 பேர் தடுப்பூசியின் முதல் அளவை எடுத்துக் கொண்ட பின்னர் கொரோனாவை பெற்றுள்ளார்கள்.அதே நேரத்தில் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு 592 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 604 நோயாளிகளுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி, 71 பேர் கோவாக்சின் மற்றும் இரண்டு பேர் சினோபார்ம் தடுப்பூசி பெற்று இருந்தனர்.

இறப்பு மிக குறைவு

இறப்பு மிக குறைவு

இந்த ஆய்வில், தெரியவந்த ஒரு முக்கியமான விஷயம், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்டா பிறழ்வு வைரசால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் 9.8 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதே நேரத்தில் 0.4 சதவீதம் பேர் மட்டுமே இறந்தனர். மொத்தம் 482 பேர்(71 சதவீதம்) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளுடன் இருந்தனர். 29 சதவீதம் பேர் அறிகுறியற்ற கொரோனா நோய்த்தொற்றைக் கொண்டிருந்தனர்.

Recommended Video

    India-வில் Coronavirus 3rd Wave அடுத்த மாதம் ஏற்படலாம்.. SBI வல்லுநர் குழு எச்சரிக்கை
    டெல்டாவே அதிகம்

    டெல்டாவே அதிகம்

    தடுப்பூசிக்கு பின்னரும் நோய்த்தொற்றுகளின் ஒட்டுமொத்த பாதிப்பு (86.09 சதவீதம்) இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் டெல்டா மாறுப்பாட்டால்(B.1.617.2) ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வடமாநிலங்களில் இல்லை. ஏனெனில் ஆல்பா மாறுபாடு வடமாநிலங்களில் இருந்துள்ளது. இந்தியாவின் தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் டெல்டா அதிகமாக இருந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கப்பா மாறுபாடு இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தடுப்பூசி அவசியம்

    தடுப்பூசி அவசியம்

    இந்த ஆய்வில் கிடைத்த நல்ல விஷயம். தடுப்பூசியால் பெரிய பலன் கிடைத்திருப்பதுதான். எனவே தடுப்பூசி இயக்கத்தை மேம்படுத்துவதும், மக்களை விரைவாக நோய்த்தடுப்பு கிடைக்க தடுப்பூசியை செலுத்துவதும் அவசியம் ஆகும், COVID-19 இன் மேலும் ஆபத்தான அலைகளைத் தடுப்பதற்கான மிக முக்கியமான உத்தி ஆகும். மேலும் இது சுகாதார பணியார்கள் மற்றும் சுகாதாரத்துறை மீதான புதிய அழுத்தங்களை குறைக்க உதவும் என்று ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+