முதலிடத்தில் சென்னை ஐஐடி! இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்த மத்திய அரசு!
டெல்லி: இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களின் சிறந்த பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து சாதனை பிடித்தது. மேலும் இதுதவிர பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தின் 8 கல்வி நிறுவனங்கள் சிறந்த இடங்களை பிடித்துள்ளன.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை செயல்பாடு அடிப்படையில் தரவரிசைப்படுத்த தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எப்) உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2015ம் ஆண்டில் அமைக்கப்பட்ட நிலையில் 2016 முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கற்பித்தல், கற்றல் முறை, ஆராய்ச்சி, தொழில்முறை, மாணவர்களின் திறன், தேர்ச்சி விகிதம் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

சென்னை ஐஐடி முதலிடம்
இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். இதில் ஒட்டுமொத்த பிரிவு மற்றும் என்ஜினீயரிங் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்து சிறந்த கல்வி நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 4வது ஆண்டாக ஒட்டுமொத்தப் பிரிவில் முதலிடத்தையும், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பொறியியல் பிரிவில் முதலிடத்தையும் சென்னை ஐஐடி பிடித்துள்ளது.

திருச்சி என்ஐடிக்கு 7ம் இடம்
என்ஜினீயரிங் பிரிவில் சென்னை ஐஐடி முதல் இடம் பிடித்த நிலையில் 2வது இடத்தில் டெல்லி ஐஐடி, 3வது இடத்தில் மும்பை ஐஐடி, 4வது இடத்தில் ஐஐடி கான்பூர், 5வது இடத்தி்ல ஐ ஐடி காரக்பூர் ஆகியவை பிடித்துள்ளன. 7 வது இடத்தில் ஐஐடி ரூர்க்கி, 8 வது இடத்தில் ஐஐடி கவுகாத்தி, 9 வது இடத்தில் தமிழகத்தின் என்ஐடி திருச்சி, 9 வது இடத்தில் ஐஐடி ஹைதராபாத், 10 வது இடத்தில் என்ஐடி சூரத்கல் உள்ளன.

வேலூர் சிஎம்சி, சென்னை மாநில கல்லூரி
சிறந்த பல்கலைகழகங்கள் பிரிவில் ஐஐஎஸ்சி பெங்களூர் முதலிடம் பிடித்தது. 2வது இடத்தில் டெல்லி ஜேஎன்யூ, 3வது இடத்தில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா ஆகியவை உள்ளன. சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் டெல்லி மிரண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடமும், டெல்லி இந்து கல்லூரி 2வது இடமுமு், சென்னை மாநில கல்லூரி 3வது இடத்தையும் பிடித்துள்ளது. சிறந்த மருத்துவக்கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடம் பிடித்தது. இந்த பட்டியலில் சண்டிகர் பிஜிஐஎம்இஆர் கல்லூரியும், 3வது இடத்தில் வேலூர் சிஎம்சியும் உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 8 நிறுவனங்கள்
இதுதவிர பல் மருத்துவம், பார்மஸி கல்லூரி, உள்ளிட்டவைகளும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் பிரிவில் விஐடி 9 வது இடத்தில் உள்ளது. மொத்தமாக பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த பல்கலைக்கழகம், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என மொத்தம் 8 நிறுவனங்கள் டாப்10க்குள் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications